தமிழக வெற்றிக்கழகம் கட்சி எடுத்த எடுப்பில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க முடியுமா?

தமிழக வெற்றிக்கழகம் கட்சி எடுத்த எடுப்பில் 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2024-02-20 16:06 GMT

தற்போதைய தமிழ் சினிமா உலகில்  முன்னணி நடிகராக இருப்பவர் இளைய தளபதி என அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். இந்த கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து விட்டார். கட்சியின் கொள்கை, எதிர்கால திட்டம் பற்றியும் அறிவித்து விட்டார். இந்த கட்சியானது 2026 சட்டமன்ற தேர்தலில் தான் களத்தில் இறங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக வெற்றிக்கழகம்

இந்த நிலையில் சென்னை பனையூரில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு நமது வெற்றிக்கழகம் கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது தான். இது ஒரு இமாலய இலக்கு ஆகும்.

இந்த இலக்கை தமிழக வெற்றிக்கழகம் கட்சியால் அடைய முடியுமா? அதற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா? என்ற கேள்விகளுக்கு விடை தேடும் முன்பாக விஜயின் சினிமா உலக கால் பதிப்பு, சமூக பணி, அரசியல் ஈடுபாடு பற்றி முழுமையாக பார்ப்போமா?


நாளைய தீர்ப்பு நாயகன்

1984-ல் "வெற்றி" திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் விஜய்.1992-ல் "நாளைய தீர்ப்பு" திரைப்படத்தில் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார்.

"செல்வா", "ராஜாவின் பார்வை", "கண்ணுக்குள் நிலவு" போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

வெற்றிகரமான திரைப்படங்கள்:

"பூவே உனக்காக", "கில்லி", "திருப்பாச்சி", "போக்கிரி", "மாஸ்டர்" போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றன.

"கத்தி", "சச்சின்", "துப்பாக்கி" போன்ற திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டன.

காதல், நகைச்சுவை, அதிரடி, சமூக கருத்து திரைப்படங்கள் என பல்வேறு வகையான திரைப்படங்களில் நடித்துள்ளார். நடனம், சண்டை காட்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

சாதனைகள்:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர். 7 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.3 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். 2017-ல் ஃபோர்ப்ஸ் இந்தியா பட்டியலில் 100-வது செல்வாக்கு மிக்க நபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்து விளங்கி வருகிறார். தனது திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களை மட்டுமல்லாமல், விமர்சகர்களையும் கவர்ந்துள்ளார். தற்போது அரசியலில் நுழைய உள்ள அவர், தமிழக மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்தே அவரது எதிர்காலம் அமையும்.

2009-ல் விஜய் மக்கள் இயக்கம் (விஜய் மக்கள் அமைப்பு) என்ற அமைப்பை தொடங்கி, ரசிகர்களின் நலனுக்காக பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தார்.

2017-ல், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கம் திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்த திட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.

2021-ல், விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது.

2023-ல், "தமிழக வெற்றிக் கழகம்" என்ற பெயரில் கட்சி தொடங்கப்பட்டது.

விஜய்யின் எதிர்கால திட்டம்:

2026-ல் நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது விஜய்யின் முக்கிய இலக்கு.தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்ற திட்டம் உள்ளது."நல்லாட்சி" கொடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

விஜய்யின் சமூக சேவைகள்:

விஜய் மக்கள் இயக்கம் மூலம், பல்வேறு சமூக சேவை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல், பெண்கள் உரிமை போன்ற துறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.ஏழை எளிய மக்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.இயற்கை பேரிடர்களின் போது நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.


2 கோடி உறுப்பினர்கள் சாத்தியமா?

2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பது என்பது ஒரு சவாலான இலக்கு.விஜய்யின் திரை ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவாளர்கள், மற்றும் அரசியல் மாற்றத்தை விரும்பும் மக்கள் ஆகியோரை இணைத்து இந்த இலக்கை அடைய முடியும்.

கடந்த 1967 முதல் தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வரும் திமுக ,அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் எதிர்த்து அறுபது ஆண்டுகளாக வேறு எந்த கட்சியாலும் வெற்றி பெற முடியவில்லை என்பது ஆதாரபூர்வமான உண்மை. அதற்கு காரணம் இந்த இரு கட்சிகளும் மக்களின் உணர்வோடு ஒன்றிவிட்டன என்பது மட்டும் அல்ல அதிமுக 2 கோடி உறுப்பினர்களையும், திமுக ஒன்றரை கோடி உறுப்பினர்களையும் தன்னகத்தே கொண்டிருப்பதாக கூறி வருகிறார்கள்.

எப்படி முடியும்?

இந்த சூழலில் புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜயால் எடுத்த எடுப்பில் எ 2 கோடி உறுப்பினர்கள் சேர்ப்பு என்கிற இலக்கை எப்படி எட்டி பிடிக்க முடியும் என தெரியவில்லை. ஏனென்றால் தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையே ஆறரை கோடி தான். இவர்களிலும் தேர்தலில் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் என பார்த்தால் சுமார் ஐந்து கோடி பேர் தான் தேறும்.

பஞ்ச் வசனம்

நடிகர் விஜய் திரைப்படத்தில் நான் ஒரு முறை முடிவெடுத்து விட்டால் அதனை நானே நினைத்தாலும் மாற்ற முடியாது என பஞ்ச் வசனம் பேசி ரசிகர்களின் கரகோஷத்தை பெற்று இருக்கிறார். வெண் திரையில் பெற்ற அந்த கரகோஷத்தை தேர்தல் களத்தில் பெற முடியுமா? என்பது கேள்விக்குறிதான். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்த அவருக்கு மக்கள் அளிக்க போகும் தீர்ப்பு தான் அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

Tags:    

Similar News