மதுரை அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பா.ஜ.க கண்டனம்
அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.;
அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்துள்ள அறிக்கையில்... ராஷ்டிரிய சுயம்சேவக் அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் மதுரை வருகை புரிந்தார். ராஷ்டிரிய சுயம்சேவக் அமைப்பின் அகில இந்தியத் தலைவர் மோகன் பாகவத் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அமைப்பின் நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்தித்து வழக்கமான ஒன்று ஆங்காங்கே ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கேற்பார் இவருக்கு உயர்மட்ட பாதுகாப்பான இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
உலகின் பெரிய சேவை அமைப்புகளில் ஆர்எஸ்எஸ் முதன்மையாக திகழ்கிறது அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கும் இந்திய மக்களின் உயர்வுக்கும் சேவையாற்றிய அமைப்பாக விளங்குகிறது மோகன் பாகவத் மதுரை கன்னியாகுமரி பகுதிகளில் 22 ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் இவர் மதுரை வருகைக்கான ஏற்பாடுகளை அங்குள்ள (மதுரை) அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டின் அதி உயர் பாதுகாப்பு கொண்ட தலைவர் வருகையின் போது வழக்கமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதனை பின்பற்றி மதுரை மாநகராட்சி நிர்வாகிகள் செயல்பட்டுள்ளனர். இதற்கென மதுரை துணை ஆணையர் சண்முகம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பராமரிப்பு பணிகள் குறித்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக தமிழக அரசு அவரை பணிநீக்கம் செய்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது கண்டிக்கத்தக்கது.
யார் யார் வந்தால் என்னென்ன பராமரிப்பு பாதுகாப்பு என்பதற்கு தமிழக அரசு தனியாக பட்டியல் வைத்து வைத்துள்ளதா? பாதுகாப்பு பட்டியலில் இருக்கும் தலைவர்கள் வரும் பொழுது அவர்களுக்கு உரிய வசதி செய்து கொடுப்பது சட்டவிரோதமாக இந்த நடவடிக்கையின் மூலம் அரசு அதிகாரிகள் எந்த வகையில் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறது என்று புரியவில்லை.
திமுகவின் சாமானிய தலைவர்கள் சென்றால்கூட மாநகராட்சி அதிகாரிகளை நேரில் சென்று சாலை சீரமைப்பு அனைத்து விதமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது ஆனால் தாங்கள் விரும்பாத அமைப்பின் மிக முக்கியமான தலைவர் வருகைக்கான ஏற்பாடுகளை வழக்கம் போல செய்த அதிகாரிகள் தண்டனை கொடுப்பது நியாயமா?
மேலும் இத்தகைய நடவடிக்கை முன் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் தமிழக அரசு நேர்மையாக பாரபட்சமின்றி நடந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றால் துணை ஆணையர் சண்முகம் பணி விடுவிப்பு ரத்து செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் திமுக ஆட்சியில் ஒருதலைப்பட்சமான செயலையும் அதிகாரிகள் வழிவகைகளையும் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்வோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.