அயோத்தி ராமர் வழங்கிய ஆசியால் உ.பி.யில் தப்பி பிழைத்த பாரதிய ஜனதா

அயோத்தி ராமர் வழங்கிய ஆசியால் உ.பி.யில் பாரதிய ஜனதா கட்சி தப்பி பிழைத்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Update: 2024-06-05 16:00 GMT

அயோத்தி ராமர் கோவில் (கோப்பு படம்).

அயோத்தி ராமர் வழங்கிய ஆசியால்தான் உத்தர பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தப்பிப்பிழைத்திருப்பதாக ஆன்மிக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.

இந்திய திருநாட்டின் 18 ஆவது மக்களவையை அமைப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.  நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு  முடிவு நேற்று இரவுக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிட்டது. ஏனென்றால் தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி கட்சியின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அவர் மூன்றாவது முறையாக பதவி ஏற்க உள்ளார்.

கடந்த இரண்டு தேர்தலிலும் அதாவது 2014 மற்றும் 2019 தேர்தல்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியால் இந்த முறை தனி பெரும்பான்மை பெறுவதற்கு 32 தொகுதிகள் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இந்த இடைவெளிக்கு காரணம் உத்தரப்பிரதேச மாநிலம் தான். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் முதலாவது இடத்தில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டுமே 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சி 73 இடங்களில் வெற்றி வாகை சூடி இருந்தது. இந்த முறை அங்கு அவர்களுக்கு 35 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன .உத்தரப் பிரதேச மாநில மக்கள் வழங்கிய தீர்ப்பு தான் பெரும் மாற்றத்தை  குறிப்பாக பாரதிய ஜனதா கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் இப்படி ஒரு சறுக்கலை தங்களுக்கு வழங்கும் என பாரதிய ஜனதா கட்சியோ, பிரதமர் மோடியோ எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஆனால் மக்கள் இப்படி  ஒரு தீர்ப்பை அவர்களுக்கு கொடுத்து அதிர்ச்சி  வைத்தியம் அளித்து இருக்கிறார்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய தீருவோம் என்பது பாரதிய ஜனதா கட்சியின் நீண்ட கால கனவு திட்டங்களில் ஒன்று. அதனை நிறைவேற்றி முடித்து விட்டார்கள். இதன் காரணமாக உ.பி.யில் மேலும் அதிக சீட்டுகள் கிடைக்கும் என்று தான் அவர்கள் கனவு கண்டு கொண்டு இருந்தார்கள். ஆனால் அந்த கனவு தகர்ந்து விட்டது. இதன் காரணமாக பாரதிய ஜனதா கட்சிக்கு கை கொடுக்காத அயோத்தி ராமர் என்று கூட ஒரு கருத்து இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இது ஒருபுறம் இருக்க அயோத்தி ராமர் கைகொடுக்கவில்லை என்று கூற முடியாது. அயோத்தி ராமரின் ஆசி இல்லை என்றால் காங்கிரசும், சமாஜ்வாடி கட்சியும் அமைத்திருந்த வலுான கூட்டணி வியூகத்தில் சிக்கி பாரதிய ஜனதா கட்சி இன்னும் குறைவான எண்ணிக்கையில் தொகுதிகளை பெற்று மோசமான தோல்வியை சந்தித்து இருக்கும் என்று ஆன்மீகம் சார்ந்த அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஏனென்றால் அங்கு காங்கிரஸ் கட்சியால் வரும் ஆறு இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது சமாஜ்வாடி கட்சியின் ஆதரவு இல்லை என்றால் அவர்கள் இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி தனித்து நின்று தப்பி பிழைத்து இருப்பதற்கு காரணம் அயோத்தி ராமரின் ஆசி தான் என்றே கருதப்படுகிறது.

Tags:    

Similar News