நீங்கள் நலமா? திட்டத்தை துவக்கி வைத்த ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

நீங்கள் நலமா? திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

Update: 2024-03-06 13:53 GMT
முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

நீங்கள் நலமா என்று கேட்கும் ஸ்டாலின் அவர்களே நாங்கள் நலமாக இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு. வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை எனவும் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

நீங்கள் நலமா திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பயனாளிகளிடம் உரையாடினார். தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன் பெற்றவர்கள், கோரிக்கை மனு அளித்து அதன் மூலம் பலன்பெற்றவர்கள், காத்திருப்பவர்கள் என அனைவரையும் உணர்ச்சிப் பூர்வமாக அணுகுவதே 'நீங்கள் நலமா?' திட்டம்.

இன்று நீங்கள் நலமா திட்டத்தை தொடங்கி வைத்து தனலட்சுமி என்ற பெண்ணிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின். மகளிர் உதவித்தொகை கிடைக்கிறதா?அந்த பணத்தை முழுவதுமாக செலவு செய்கிறீர்களா? ஏதாவது சேமிக்க முடிகிறதா என்றும் கேட்டார். மக்களை நோக்கி இனி அரசு வரும்... மக்களின் நலனை அறிய அரசு காது கொடுக்கும்..." என்ற முழக்கத்தை பிரதானமாக வைத்து இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில் உங்கள் ஆட்சியில் நாங்கள் நலமாக இல்லை ஸ்டாலின் என்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

இதுதொடர்பான எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், "நீங்கள் நலமா" என்று கேட்கும் ஸ்டாலின் அவர்களே- நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு! சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு! சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு! விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு! எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு! இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடிய ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!" என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கார்டூன் படத்தில், "பணி நிரந்தரம் இல்லை, வேலைவாய்ப்பு இல்லை, முதியோர் ஓய்வூதியம் இல்லை, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை, நீட் ரத்து இல்லை, தாலிக்கு தங்கம் இல்லை மற்றும் மடிக்கணினி இல்லை" என்ற வாசகங்களுடன், #நாங்கள் நலமாக இல்லை - ஸ்டாலின் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்கள் நலமா என முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டத்தை தொடங்கிவைத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசை கடுமையாக சாடி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Tags:    

Similar News