தமிழக கவர்னர் ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு: சி.பி.ஐ. விசாரணை கோரி மனு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கவர்னர் ரவியை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளசாராய உயிரிழப்பிற்கு சிபிஐ விசாரணை கோரி மனு அளித்தார்.

Update: 2024-06-24 10:30 GMT

தமிழக கவர்னர் ஆர்என் ரவியை இன்று அவரது மாளிகையில் அண்ணாமலை தலைமையில் பாஜக நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.

Annamalai meets T.N. Governor,கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 20ந்தேதி கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் இதுவரை 58 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிர்ப்பலி இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தமிழகம் மட்டும் இன்றி இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு வந்துள்ளனர்.

Tamil Nadu BJP seeks CBI probe into Kallakurichi hooch tragedyஆனால் முதல்வர் ஸ்டாலின் இதுவரை கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் தாய் தந்தையை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்படும். அவர்களது கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதி இருப்பதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கூறி இருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலை இன்று தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை அவரது மாளிகையில் சந்தித்தார். அப்போது அவருடன் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பாஜக மூத்த தலைவர்கள் முன்னணி பிரமுகர்களும் சென்று இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது அண்ணாமலை ஆளுனர் ரவியிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு பரிந்துரை செய்யவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு  மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

Kallakurichi hooch tragedy, submits representation seeking CBI probeமதுவிலக்கு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம் என்று  அண்ணாமலை சமூக ஊடக தளமான எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக, அமமுக , பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன . எனினும், தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஜூன் 22ஆம் தேதி, அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதால் , இறப்புகள் தொடர்பாக எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்பதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று கூறினார்  என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News