முதல்வரின் தனிச்செயலாளர் உதய சந்திரனுக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு

முதலமைச்சரின தனிச் செயலாளர்களான உதய சந்திரன், உமாநாத், சண்முகம் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.;

Update: 2023-01-19 16:00 GMT

உதய சந்திரன் (பைல் படம்)

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனிச் செயலாளர்களாக இருந்து வருபவர்கள் உதயசந்திரன், உமாநாத், சண்முகம். இவர்களுக்கு தமிழக அரசு 12 துறைகளை பிரித்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.

உதயசந்திரனுக்கு, சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. உமாநாத் ஐ.ஏ.எஸ்க்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில், ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை ஆகிய துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சண்முகம் ஐ.ஏ.எஸ்க்கு , கால்நடை மற்றும் மீன்வளத்துறை, கைத்தறி, காதி, சமூக சீர்த்திருத்தம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முதல்வரின் சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளை திட்டமிடுதல் ஆகியவை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் 4ம் தனிச் செயலாளராக இருந்த அனு ஜார்ஜ்க்கு வழங்கப்பட்டிருந்த 12 துறைகள், தற்போது 3 தனி செயலாளர்களுக்கு பிரித்து வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News