நீட் விலக்கு தொடர்பாக ஜன.8ல் அனைத்துக்கட்சி கூட்டம்: முதல்வர்

நீட் தேர்வில் விலக்கு தொடர்பாக ஜனவரி 8ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2022-01-06 05:45 GMT

நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக, ஜனவரி 8,ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
இது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் விதி 110,ன் கீழ், முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், நீட் தேர்வு என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.  நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் படிப்பது என்பது கேள்விக்குறியாகிறது.

நீட் தேர்வில் விலக்கு அளிக்கும் விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கடிதம் வழங்க அனுமதி கேட்ட்ருந்தனர். ஆனால், அமைச்சர் அமித்ஷா எம்.பி.க்களை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. எனவே, அவரது அலுவலகத்தில் கடிதம் வழங்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க நேரம் ஒதுக்காத அவரது செயல், கூட்டாட்சிக்கு எதிரானது .
பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப்படிப்பில் மாணவர்களை சேர்த்து, மருத்துவத்துறையில் நாட்டில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. பிளஸ் 2, அடிப்படையில் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. 
போராட்டம் மூலமே உரிமைகள் பெறப்பட்டுள்ளன. எனவே, நீட் தேர்வுக்கு எதிரான அரசின் போராட்டம் தொடரும்.  நீட் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய,  நாளை மறுநாள் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று, பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Tags:    

Similar News