ஜூன்14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

ஜூன் 14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.;

Update: 2021-06-09 07:25 GMT

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார். 

வருகிற ஜூன் மாதம் 14ம் தேதி அன்று அதிமுக எம்.எல்.ஏ,கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கு அனுமதி வழங்க கோரி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அடிப்படையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை அதிமுக பெற்றது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக அதிமுக  துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். 

இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி அன்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் வருகிற ஜூன் மாதம் 14 ம் தேதி அன்று அதிமுக எம்.எல்.ஏ,கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.  அந்த கூட்டம் நடத்துவதற்கு  அனுமதி வழங்க கோரி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  மனு வழங்கியுள்ளார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் சசிகலா ஆடியோ குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர், கொறடாவை தேர்வு செய்யவும் இந்த  கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News