அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம் என தகவல்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மூச்சு திணறல் காரணமாக அப்போலோவில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தற்போது உடல்நிலை கவலைக்கிடம் என தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2021-08-04 03:54 GMT

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் 

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நல குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சு திணறல் காரணமாக அப்போலோவில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், மதுசூதனன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் என தகவல் வெளியாகியுள்ளது. மதுசூதனன் அதிமுக தலைவர்களின் மூத்தவரும் மிக முக்கியமானவரும் கூட.ஜெயலலிதா ஆட்சியின்போது இவருக்கு கைத்தறித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ. பன்னீர்செல்வத்துக்கு இவர்தான் முதலில் ஆதரவு தெரிவித்தவர். கடந்த மாதம் 20 ம் தேதி அப்போலோவில் மதுசூதனனை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்ற போது அதே நேரத்தில் சசிகலாவும் வந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News