தேர்தலுக்கு பின் அ.தி.மு.க. என்ன ஆகும்? டெல்லிக்கு சென்ற அதிர்ச்சி ரிப்போர்ட்

டெல்லிக்கு சென்ற ரிப்போர்ட்டால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க. என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2024-01-24 15:43 GMT

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அதிமுக நிலை என்ன ஆகும் என்பது தொடர்பாக டெல்லிக்கு அதிர்ச்சி ரிப்போர்ட் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்திய நாடாளுமன்றத்திற்கு வருகிற ஏப்ரல்  மே மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு உள்ளது. விரைவில் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா காரணமாக வட மாநிலங்களில் மக்கள் இடையே தீவிர பாஜக ஆதரவு அலை உள்ளது.முக்கியமாக உத்தர பிரதேசம் தொடங்கி பீகார் வரை சில ஹிந்தி மாநிலங்களில் தீவிர பாஜக உணர்வு எழுந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு நாடாளுமன்ற  தேர்தல் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் வாய்ப்புகள் உள்ளன. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்று முடிந்த மறு நாளே ஏப்ரல் 16ம் தேதி லோக் பா தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின்  ஒரு சுற்றறிக்கை வெளியானது. பிப்ரவரி இரண்டாம் வாரம் அல்லது 3ம் வாரம் சூட்டோடு சூடாக இந்த தேர்தல் அறிவிப்பு வெளியாகும்.

2024 லோக்சபா தேர்தல் பெரும்பாலும் ராமர் கோவில் திறப்பு உள்ளிட்ட ஆன்மீக விஷயங்களை மையப்படுத்தியே இருக்கும் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர். இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலுக்கு பின் அதிமுக கேம் ஓவர் ஆகிவிடும் என்று டெல்லி பாஜகவிற்கு ஒரு ரிப்போர்ட் சென்றுள்ளதாம். அதன்படி அதிமுகவின் செயல்பாடுகள் தொடர்பாக இந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டு உள்ளதாம்.

இதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் கூறப்படுகிறது.

அயோத்தி விவகாரத்தில் அ.தி.மு.க. பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. பெரிதாக லைம்லைட்டில் இல்லை. திமுக அமைச்சர்கள் கைது விவகாரத்தை கூட அ.தி.மு.க. பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதற்கான பணிகள் எதையுமே செய்யவில்லை.  நாம் தமிழர் சமூக வலைத்தளங்களில் இருக்கும் அளவிற்கு கூட அ.தி.மு.க. எந்த பணிகளையும் செய்யவில்லை.. பாஜக கூட்டணி இல்லாமல் அ.தி.மு.க. தனியாக உள்ளது. மற்ற கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க இறங்கி வரவில்லை.

தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் , வி.சி.க. ஆகியவை கூட அதிமுக விடம் வரவில்லை. பாமக போன்ற கட்சிகள் கூட அதிமுகவுடன் கூட்டணிக்கு வரவில்லை. சென்னை வெள்ளம் தொடங்கி தி.மு.க.விற்கு பின்னடைவை ஏற்படுத்திய விஷயம் எதிலும் எடப்பாடி பழனிசாமி பெரிதாக அரசியல் செய்யவே இல்லை.

இதை பற்றிய ரிப்போர்ட் தான் தற்போது டெல்லிக்கு சென்றுள்ளதாம். இதே நிலை தொடர்ந்தால் 2024 லோக்சபா தேர்தலுக்கு பின் அ.தி.மு.க. என்ற கட்சிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று ரிப்போர்ட் ஒன்று பாஜகவிற்கு சென்றுள்ளதாம். அதாவது பா.ஜ.க. தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்தை பிடிக்கும். அல்லது தி.மு.க.விற்கு எதிரி என்ற இடத்தை பிடிக்கும் நிலையை அடையும் என்று அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டு உள்ளதாம்.

அதிமுக வில்  இதே நிலை தொடர்ந்தால் அது பா.ஜ.க.விற்கு சாதகமாக மாறும் என்று அந்த ரிப்போர்ட்டில் மேலும் கூறப்பட்டு உள்ளதாம். ஒருவேளை மீண்டும் அதிமுக பாஜக இடையே  கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தால். இந்த ரிப்போட்டை பயன்படுத்தி அதிமுகவிற்கு பாஜக செக் வைக்கும் என்கிறார்கள். அதாவது உங்களுக்கு பலமே இல்லை.. அதனால் எங்களுக்கு கூடுதல் இடம் கொடுங்கள் என்று பாஜக அதிமுகவிடம் பிரஷர் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கான வாய்ப்பே இல்லை என்று அதிமுக வட்டாரத்தில்  கூறப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News