நேற்று கோவை இன்று திருச்சி நாளை?காணாமல் போய்விடுமா?கமல்ஹாசன் கூடாரம்.

காலியாகிறது மநீம கூடாரம்: கட்சியில் இருந்து திருச்சி முருகானந்தம் எஸ்கேப்பு…

Update: 2021-05-19 07:49 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பெரும் தோல்வி அடைந்த நிலையில், கட்சியில் இருந்து பலர் வெளியேறிய நிலையில், தற்போது, திருச்சி முருகானந்தமும் வெளியேறி கட்சி தலைமை மீது குற்றம் சாட்டி 6 பக்க கடிதம் எழுதி உள்ளார்.

தேர்தல் 'தோல்விக்கு பின் கமல் அணுகுமுறையில் மாற்றமில்லை; மாறுவார், மாற்றம் தருவார் என்ற நம்பிக்கையுமில்லை' எனக்கூறி, கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, துணை தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தது ராஜினாமா செய்தனர்..துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ்; பொதுச் செயலாளர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், திடீரென கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய கமல் கூட வெற்றி பெற முடியாத நிலையில், மொத்த கூட்டமும் மூட்டை முடிச்சோடு காலி பண்ணிக்கிட்டு வராய்ங்களாம்.

நேத்திக்கு ராத்திரி கோவை தெற்கு மாவட்ட செயலாளர் எங்கள் மண்ணின் மைந்தன் மகேந்திரனையே துரோகி என்றீர்கள் என்னை என்ன சொல்வீர்கள் அப்படின்னு ஒரு பக்க கடுதாசி எழுதிட்டு ஒதுங்கிட்டாரு.

அந்த டைம்ல வாட்.ஸ் அப்ல ராத்திரி 11 மணிக்கு திருச்சில முருகானந்தம் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக ஒரு மேட்டர் பரவுனது.. அப்பவே தெரியும் அண்ணன் அப்ஸ்காண்ட் ஆகப்பபோறாரு போல அப்படின்னு.. இருந்தாலும் என்ன சொல்றாரு பார்ப்போம் அப்படின்னு போய் குந்துனா? நம்ம என்ன நினைச்சமோ அதையே தான் சொன்னாரு மநீம கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஆன திருச்சி முருகானந்தம் எனும் நான் கட்சியில் இருந்து விலகுவதாக உங்களாண்ட தெரிவித்து கொள்(ல்)கிறேன். அத்தோட விட்டா பரவாயில்லை நம்மவர் மீது குற்றம் சாட்டி 6 பக்கத்துல கடுதாசி வேறே அனுப்பி இருக்காராம்.

நம்மளும் போனதுக்கு ஏதாவது கேள்வி கேட்டு வைப்போம் அப்படின்னு ஏன் முருகானந்தம் சார் அம்மாம் பெரிய கட்சில இருந்து போறீங்கோ அப்படினா.... மனுஷன் புலம்பி தள்ளிட்டாரு..உங்களுக்கு தெரியாது ரிப்போர்ட்டர் இப்ப முடிஞ்சுதில்ல தேர்தல்...

அதுல தோத்ததுக்கு பின்னாடியும் அந்தாளு அணுகுமுறையில் மாற்றமில்லை; சரி மாறுவார் மாற்றம் தருவாரு அப்படின்னு பார்த்தா இப்போ அந்த நம்பிக்கையுமில்லை' எனக்கூறி, கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, துணை தலைவர்கள், பொதுச் செயலர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தது ராஜினாமா செஞ்சாய்ங்க.

எம்மாம் பெரிய ஆளுக இவங்க துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ்; பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், அவுகளே திடீரென கட்சியில் இருந்து விலகிபுட்டாய்ங்க.

அப்புறம் நமக்கு இன்னாத்துக்கு அப்படின்னு தான் நேத்து ராத்திரி புல்லா யோசிச்சி 6 பக்கத்துக்கு கடுதாசி ரெடிபண்ணிட்டு தான் உங்களுக்கு தகவல் கொடுத்தேன் அப்படின்னாரு..

அது சரி நமக்கு எதுக்கு ஊர் வம்பு அப்படின்னு நெனச்சா விடாம இன்னொரு கேள்வி தொரத்துச்சி அதாவது இப்போ கொரோனா கோசரம் 10 மணிக்கு மேல வெளில சுத்துனா பைன் போடுவாங்க வண்டிண புடுங்குவாங்க அப்படின்னு ரூல் இருக்குல்ல அப்படின்னு.. சரி கேட்டுவிடாலம் அப்படின்னு பொதுமக்கள் தங்களின் முக்கியமான தேவைகளுக்கு காலை பத்து மணிக்குள் போய் வந்து கொள்ளலாம் என்று அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விழித்திருக்கும் நிலையில், இந்த பத்திரிகையாளர் சந்திப்பு அவ்வளவு முக்கியமானதா ?

10 மணிக்கு மேல் இந்த சந்திப்புக்கு வந்து செல்வதற்கு தனிப்பட்ட முறையில் பெர்மிஷன் ஏதும் வாங்குனீங்களா? அரசியல்வாதிகளின் இப்படிப்பட்ட பேட்டி கொடுக்க மட்டும் எப்படி அனுமதிக்கப்படுகின்றார்கள்? அப்படின்னு கேட்டா மனுஷன் வெலவெலத்து இவனுக நம்மள வெச்சி செஞ்சுருவாங்களா அப்படின்னு எஸ்கேப் ஆயிட்டாரு,

அந்த கடுதாசி இதுதான்..


ஆனா இந்த கேள்விகள் எனக்கு மட்டும்தான் எழுகிறதா ? உங்களுக்கும் எழ வேண்டும்...

Tags:    

Similar News