புதுச்சேரி-15வது சட்டப்பேரவை தற்காலிகதலைவராக லட்சுமி நாராயணன் நியமனம்.

கடந்த 7ஆம் தேதி புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார்;

Update: 2021-05-21 19:10 GMT

புதுச்சேரி-15 வது சட்டப்பேரவை தற்காலிகதலைவர் லட்சுமி நாராயணன்

புதுச்சேரி 15வது சட்டப்பேரவை தற்காலிக தலைவராக லட்சுமி நாராயணன் நியமனம் செய்யப்பட்டார்

புதுச்சேரியில் நடத்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதனிடையே கடந்த 7ஆம் தேதி புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார். இதனிடையே புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக லட்சுமி நாராயணனை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்தார். இந்நிலையில் இன்று(மே 21) மாலை ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான லட்சுமி நாராயணனை சட்டப்பேரவை தலைவராக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நியமித்துள்ளார்.

Tags:    

Similar News