ஜக்கி வாசுதேவ் பற்றி இனி நான் பேச மாட்டேன் - அமைச்சரின் அறிக்கை.

நான் சத்குரு பத்தி பேசல - நீ என்னோட குடியுரிமை பத்தி பேசாதே ..டீலா..நோ டீலா .. ?

Update: 2021-05-19 16:33 GMT

பிடிஆர் பழனிவேல்ராஜன் -ஜக்கிவாசுதேவ் (கோப்புபடம்)

ஜக்கி வாசுதேவ் பற்றி பேசிய விவகாரம் இனி அவர் பற்றி பேசவில்லை அந்தர் பல்டி அடித்து தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் நான் பல பத்தாண்டுகளில் வெளிநாடுகளில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளேன். உலகின் 50 மிக முக்கிய சர்வதேச வங்கிகளில் ஒன்றிற்கு நிர்வாக இயக்குனர் மற்றும் சர்வதேச தலைமைப் பொறுப்பையும் ஏற்று பணியாற்றியுள்ளேன். ஆனால் என் வாழ்நாள் பணி அனுபவத்தில் நான் ஏற்ற பொறுப்புகளில் மிக முக்கிய பொறுப்பு தமிழக அரசின் நிதிஅமைச்சர் எனும் பொறுப்புதான்.தமிழக முதல்வர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையிலும் நான் பொது வாழ்க்கையில் ஈடுபடுவது அவசியமாகும் அது சாத்தியப்படும் காரணமாக விளங்கும் என் முன்னோர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் என் திறன்கள் அனைத்தையும் பயன்படுத்தி என் கடமைகளை நிறைவேற்றி நிச்சயம் மக்களுக்காக பாடுபடுவேன்.

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி covid-19 பெருந்தொற்று இரண்டாவதுஅலை காரணமாக மதுரை மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் நோய் தொற்றுகளை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி அதில் என் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன். எங்கள் பணி திட்டங்களில் பணியில் ஈடுபடுவோர் உட்பட அனைவரும் இணைந்து பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தி உள்ளோம் அனைவரையும் உள்ளடக்கிய துரிதமாக செயல்பட்டு திட்டங்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.

இவற்றைத் தாண்டி மாநில நிதி நிலைமையை மேம்படுத்துவது நம் அரசாங்கத்தின் மனிதவளநிர்வாகத்தை ஆராய்ந்து அதனை சீர் செய்வதுதான் என் நீண்டகால பணியில் முன்னுரிமை ஆகும்

எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நான் பதவி வகித்த போது தமிழக ஊடகங்களும் தேசிய ஊடகங்களும் ஓரளவிற்கு எனக்கு அன்பும் ஆதரவும் அளித்தன. அதன் காரணமாக கழகம் சார்ந்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்தது ஆனால் அந்த காலகட்டங்களில் கூட பத்திரிகையாளர் சந்திப்புகள் தொலைக்காட்சி விவாதங்கள் ஆகியவற்றுக்கான அழைப்புகளை மிகச் சிறிய அளவில்தான் நான் ஏற்று உள்ளேன் என்பதை தாங்கள் அறிவீர்கள் எனினும் எனக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளுக்கு நான் நன்றியுடன் இருப்பேன்.

நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் பத்திரிக்கை இணைய ஊடகம் தொலைக்காட்சி வானொலி என 50 க்கும் மேற்பட்ட ஊடக அழைப்புகள் வந்தன. என் நன்றிக்கு அடையாளமாகவும் தமிழக முதல்வரின் வெளிப்படையான அரசு நிர்வாகம் தத்துவத்தின் அடிப்படையில் அவற்றுள் 12 அழைப்புகளை மட்டுமே நான் ஏற்றுக்கொண்டேன். இந்த நேர்காணலின் போது இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களை தனியார் வசம் ஒப்படைப்பது மற்றும் ஜக்கி வாசுதேவின் விதிமீறல்கள் ஆகிய இரண்டு தலைப்புகளே மீண்டும் மீண்டும் என் முன்வைக்கப்பட்டது இக்கேள்விகள் முன்வைக்கப்பட்ட போது நான் பதிலளித்து இருந்தாலும் இவை இரண்டும் என் அமைச்சகத்துக்கு சம்பந்தப்பட்டவை அல்ல என்பதையும் என் கவனம் இதுபோன்ற விஷயங்களில் செல்ல நான் விரும்பவில்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்

சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் துறைகளும் இவ்விஷயங்கள் மீது தக்க சமயத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். சக பணியாளர் மற்றும் குழுவில் ஒரு அங்கம் என்ற வகையில் தேவைப்படும் பொழுது அவர்களின் விருப்பத்திற்கு இணங்க என் கருத்துகளையும் ஆதரவையும் நான் அளிப்பேன்.

வெளியிடப்பட வேண்டிய மிக முக்கிய கருத்துக்கள் அனைத்தும் சமீபத்திய நேர்காணல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றே நான் கருதுகிறேன். எனவே இம்மாத இறுதிவரை ஊடகம் சார்ந்த சந்திப்புகள் அனைத்தையும் நிறுத்தி கோவிட் 19 சார்ந்த பணிகளில் என் முழு கவனத்தையும் செலுத்த விரும்புகிறேன். இதற்கு நம் ஜனநாயகத்தின் மிக முக்கிய தூணாக விளங்கும் ஊடக நண்பர்கள் அனைவரின் ஆதரவையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஜக்கி வாசுதேவ் மீது விசாரணை அல்லது வழக்கு தொடர்வது என் கடமையும் அல்ல எனது நோக்கமும் அல்ல. நான் நிச்சயமாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள உள்ள சான்றுகளின் அடிப்படையில் ஜக்கி வாசுதேவ் பல சட்டங்களையும் விதிகளையும் ஒவ்வொரு முறையும் தொடர்ச்சியாகவும் மீறியுள்ளார் என்பது அனைத்து சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டது என்பதை உணர்த்தும்.

எனினும் இந்திய மற்றும் அமெரிக்காவில் உள்ள சம்பந்தப்பட்ட துறைகளும் அது சார்ந்த அதிகாரிகள் எவ்வித இடையூறும் அது என்னுடையதாக இருந்தாலும் எவ்வித இடையூறுமின்றி இது குறித்து தீர விசாரிக்க வேண்டும்.

மேலும் இவரை குறித்து பொது தகவல்களும் நிகழ்வுகளோ எழும் வரையில் இதை பற்றி நான் வேறு எந்த கருத்தையும் இனி தெரிவிக்கப் போவதில்லை என்று தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News