சட்டமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி அங்கிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸ் அறிவித்தார். அதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரியும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார். கருணாஸை தொடர்ந்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் ஒரு தொகுதியை திமுகவிடம் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.