அமைச்சரவையின் ஊழல்களை தொடர்ந்து அமல்படுத்துவோம் :திமுக தலைவர் ஸ்டாலின்

Update: 2020-12-27 07:20 GMT

தமிழக அமைச்சரவையில் உள்ளவர்கள் பல்வேறு ஊழல் புகாரில் சிக்கியுள்ளதாகவும், அதனை, தொடர்ந்து அம்பலப்படுத்துவோம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

தமிழகம் மீட்போம் என்ற பெயரில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக மாவட்டந்தோறும் சிறப்புப் பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில்,ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலி மூலம் பேசினார்.தற்போதைய தமிழக அமைச்சரவையில் உள்ளவர்கள் பல்வேறு ஊழல் புகாரில் சிக்கியுள்ளதாகவும், அதனை, தொடர்ந்து அம்பலப்படுத்துவோம் என்றும் கூறினார். குறிப்பாக கொரோனா ஊரடங்கின் போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய இலவச அரிசியிலும் முறைகேடு நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார். 

Tags:    

Similar News