தொண்டர்களில் ஒருவர் கூட முதல்வராக வர வாய்ப்புள்ளது : முதல்வர் பழனிச்சாமி
அதிமுகவில் தொண்டர்களில் ஒருவர் கூட முதல்வராக வர வாய்ப்புள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுக தேர்தல் பரப்புரை தொடக்கக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆட்சி அமைத்த ஒரே கட்சி அதிமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. அவர்களுக்கு நாம்தான் வாரிசு. அதிமுகவையும் ஆட்சியையும் விமர்சிப்பவர்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பிரிந்தபின் மீண்டும் இணைந்த ஒரே இயக்கம் அதிமுக. அதனை நிகழ்த்திக்காட்டியவர் ஜெயலலிதா. அதிமுகவில் தொண்டனாக இருப்பதே பெருமை. சில புல்லுருவிகள் அதிகமுவை வீழ்த்த நினைத்தன. அது தவிடுபொடியாகிவிட்டது. அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள்தான் வீழ்ந்து போவார்கள். இன்று நான் முதல்வராக இருக்கலாம். ஒபிஎஸ் முதல்வராக இருக்கலாம். நாளை தொண்டர்களில் ஒருவர் முதல்வராக வர வாய்ப்புள்ளது. ஒரு தொண்டன் முதல்வரானது அதிமுகவில் மட்டுமே சாத்தியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.