அரசுத்தலைவராக மோடி 20 ஆண்டுகள்: இணையத்தில் சேவா சமர்ப்பண் வினாடி-வினா

அரசு பதவியில் மோடி 20 ஆண்டு நிறைவு செய்திருப்பதையொட்டி இணையத்தில் சேவா சமர்ப்பண் என்கிற வினாடி வினா போட்டி நடக்கிறது,

Update: 2021-10-07 06:20 GMT

பிரதமர் மோடி.

பிரதமர்  நரேந்திர மோடி அரசுத் தலைவராக 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு 'MyGovIndia'- மைகவ் இந்தியா இணையதளம் சேவா சமர்ப்பண் வினாடி -வினா போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

"பிரதமர் மோடி @narendramodi இன்று (07.10.2021), அரசுத் தலைவராக 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். 'தற்சார்பு இந்தியா'-வுக்காகப் பணிபுரியும் ஒரு முதன்மை ஊழியராகப் பிரதமர் தன்னை எப்போதுமே விவரிப்பதுண்டு. இந்த 20 ஆண்டுகளில் தேசத்தைக் கட்டமைப்பதில் அவரின் பல்வேறு பங்களிப்பு குறித்த வினாடி வினா போட்டியில், @mygovindia மைகவ்இந்தியா என்ற இணையதளத்தில் https://t.co/nEYpBCltGN பங்கேற்றுக்கொள்ளுங்கள்" என்று டுவிட்டர் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

Tags:    

Similar News