பரிமள ரெங்கநாதர் கோயில் சார்பில் ஒரு மாதத்துக்கு மதிய உணவு
மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு ஒரு மாதத்துக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.;
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் சார்பில் ஒரு மாதத்துக்கு மதிய உணவு வழங்கத் திட்டம். முதல்நாள் நிகழ்ச்சியில் மதிய உணவினை மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் கோயில் செயல் அலுவலர் வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதையொட்டி, கொரோனா நோயாளிகள் 1 லட்சம் பேருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதியஉணவு வழங்கப்படும் என அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு திங்கள்கிழமை அறிவித்தார்.
அதன்படி, மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுபவர்களுக்கு திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் சார்பில் ஒரு மாதத்துக்கு மதிய உணவு வழங்க முடிவெடுக்கப்பட்டது.
அவ்வகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 264 கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உணவுப் பொட்டலங்களை அரசினர் மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ராஜசேகரிடம் கோயில் செயல் அலுவலர் கோபி வழங்கினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், திமுக நகர செயலாளர் செல்வராஜ், கோயில் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#இன்ஸ்டாநியூஸ் #உணவு #தகவல் #Plantoprovide #lunch #Instanews #கொரோனோ #ஊரடங்கு #patients #governmenthospital # treate #instanews #இன்ஸ்டாசெய்தி #ஆய்வு