மக்கள் நீதி மய்ய டாக்டர் மகேந்திரன் நாளை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைகிறார்

மக்கள் நீதி மய்ய பிரமுகர் டாக்டர் மகேந்திரன் நாளை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைய உள்ளார்.

Update: 2021-06-07 17:34 GMT

டாக்டர் மஹேந்திரன் 

மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய தலைவரான கோயம்புத்தூர் டாக்டர் மகேந்திரன் நாளை சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின்  முன்னிலையில் தி.மு.க.,வில் இணைகிறார்.

அவருடன் கோவை மாவட்டத்திலிருந்து அவருடைய ஆதரவாளர்கள் சுமார் 5000 பேரும் கழகத்தில் இணைகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இவர் கமல் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மக்கள் நீதி மையத்தில் இருந்து விலகினார். கமல் துரோகி என்று டாக்டர் மஹேந்திரனை சாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டாக்டர் மஹேந்திரன் அவரது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News