ஐ.டி.துறையில் 2023ல் 20 ஆயிரம் பேர் வேலையிழப்பு!

2023-ம் ஆண்டில் மட்டும் இந்திய IT துறையில் 20,000 பணி நீக்கங்கள் நடந்துள்ளன.

Update: 2024-05-29 13:45 GMT

இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் போய் சேர்கிறது. ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையில் உள்ள பொருளாதார இடைவெளி மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. நடுத்தர குடும்பத்தினர் கூட இயல்பான வாழ்க்கை வாழ முடியாது அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். அதேநேரம் இவர்களின் வாழ்வியலை புரட்டிப்போடும் அளவுக்கு வேலையிழப்பும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக வேலையிழப்பு எல்லாத்துறைகளிலும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்திய ஐ.டி., துறையில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 3 ஆயிரம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய IT மற்றும் ITeS ஊழியர் சங்கம் (AIITEU) பகிர்ந்துள்ள தரவுகளின்படி, 2023-ம் ஆண்டில் மட்டும் இந்திய IT துறையில் 20,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது

உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என தெரிவித்துள்ள AIITEU சங்கம், இந்த பணிநீக்கங்கள் சிறியது முதல் பெருநிறுவனங்கள் வரை அனைத்திலும் நிகழ்ந்துள்ளதாக கூறியுள்ளது

மேலும், நடப்பு 2024-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களில், சுமார் 2,000-3,000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளதாக, Nascent Information Technology Employees Senate (NITES) அமைப்பு தெரிவித்துள்ளது

Tags:    

Similar News