புடவைக் கட்டிக் கொண்டு பைக்கில் 30 நாடுகளுக்கு பயணம் செய்யும் பெண்
இந்திய கலாசாரத்தை பிரபலப்படுத்துவதற்காக புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் புடவைக் கட்டிக் கொண்டு பைக்கில் 30 நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளார்.;
ரமிலா.
இந்திய கலாசாரம் மிகவும் தொன்மையானது. டிஜிட்டல் யுகத்தை நோக்கி நகர்ந்தாலும் நம் கலாசாரத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் ஏராளம். அப்படி ஒருவர் தான் மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த சமூக தொழில்முனைவோர் ரமிலா லட்பிட். இவர் இந்திய கலாசாரத்தை உலகம் முழுவதும் எடுத்து செல்ல மிகப்பெரிய பயணத்தை மேற்கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.
அதன் படி தனது ஹோண்டா பைக்கில் சுமார் 20-30 நாடுகளுக்கு, 1 லட்சம் கி.மீ பயணிக்க உள்ளாராம். பாரம்பரியமிக்க மராத்தி புடவையில் இந்தப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என்பதுதான் ஹைலைட். மும்பையில் உள்ள இந்திய நுழைவுவாயிலில் இருந்து இன்று மாலை 4.30 மணியளவில் அவர் தன் பயணத்தைத் தொடங்கினார்.
ஓராண்டுக்கு இந்தப் பயணத்தைத் தொடரவுள்ள ரமிலா, 2024 மார்ச் 8ம் தேதி இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளார். இந்திய மற்றும் மகாராஷ்டிராவின் தனித்துவமிக்க கலாசாரத்தை உலகறிய செய்வதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்கிறார் ரமிலா.