நேஷனல் ஹெரால்ட் வழக்கு என்பது என்ன? அதன் விபரம்
தற்போது நாட்டில் பரபரப்பாக பேசப்படும் நேஷனல் ஹெரால்ட் வழக்கு என்பது என்ன? அமலாக்கத்துறை ஏன் ராகுலுக்கு சம்மன் அனுப்பியது?
அசோசியட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற கம்பெனியை காங்கிரசின் பணத்திலிருந்து 1938ம் ஆண்டு நேரு இந்நிறுவனத்தை துவக்கினார்.
இந்த நிறுவனம் 1) நேஷனல் ஹெரால்ட் (ஆங்கிலம்) 2) நவஜீவன் (ஹிந்தி) மற்றும் 3) குவாமி ஆவாஸ் (உருது)ஆகிய 3 செய்தித்தாள்களை நடத்திவந்தது.
தற்போது வெளிவராத இந்தப் பத்திரிகை அசோசியேடட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது.
2008ம் வருடம் ஏப்ரலில் போதிய வருமானம் இல்லாததால் இந்த செய்தி நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் சுமார் 90 கோடி கடனில் தத்தளிப்பதாகவும் காரணம் கூறி இந்த நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. அதன் இயக்குநராக மோதிலால் ஓரா இருந்தார்.
இந்தப் பத்திரிகைக்கு அவ்வவ்போது கடனைத் திருப்பி அளிக்க வேண்டும் என்கிற விதிமுறையுடன் காங்கிரஸ் கட்சி ரூ. 90 கோடி வட்டியில்லா கடன் அளித்திருந்தது. அசலை திருப்பி செலுத்தாததால் இந்த நிறுவனத்தை காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான 'யங் இந்தியா' என்கிற தொண்டு நிறுவனம் தனதாக்கிக் கொண்டது.
அசோசியட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன இயக்குநர், யங் இந்தியா நிறுவன இயக்குநரிடம் பேசி, காங்கிரஸ் பொருளாளர் மூலம் கடனை அடைக்க சொல்கிறார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு ரூ. 2000 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருக்கின்றன. எனவே ரூ. 90 கோடி கடனுக்காக எப்படி இவ்வளவு மதிப்பு வாய்ந்த நிறுவனத்தை வளைத்துப் போடலாம் என சுப்ரமணியன் சுவாமி சர்ச்சையை எழுப்பினார்.
தொண்டர்கள், காங்கிரஸ் அபிமானிகள் கொடுத்த நிதியை எப்படி தனியார் நிறுவனத்துக்கு கடனாகக் கொடுக்கலாம் என்பதும் 'யங் இந்தியா' தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர்களாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் (38 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார்கள்) உள்ளனர். அவர்கள் நேஷனல் ஹெரால்டின் சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கிறார்கள் என்பது சுப்ரமணியன் சுவாமி வைத்த குற்றச்சாட்டு.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தைரியம் இருந்தால் நீதிமன்றத்துக்குச் சென்று முறைகேட்டை நிரூபியுங்கள் பார்க்கலாம் என்றது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் ஓரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் மீது சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். மேலும், பத்திரிகையை வாங்கியதற்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக அமலாக்கத் துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்,
அசோசியட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன இயக்குநர் – மோதிலால் ஓரா
யங் இந்தியா நிறுவன இயக்குநர் – மோதிலால் ஓரா
காங்கிரஸ் பொருளாளர் - மோதிலால் ஓரா
மோதிலால் ஓரா, மோதிலால் ஓராவிடம் பேசி, மோதிலால் ஓரா மூலம் கடனை அடைத்தார்.
இதில் எங்கிருந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளது? புரிந்தவர்கள் சொல்லுங்கள்