காரில் பின் இருக்கை சீட் பெல்ட்: நாம் ஏன் அணிய மறுக்கிறோம்?

காரில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவது அவசியம். இந்த சட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த வழிகள் உள்ளன.;

Update: 2022-10-16 11:39 GMT

காரில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் சரியான முறையில் அமலாக்கப்படவில்லை.. ஓட்டுநர்களை மட்டும் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிக்கின்றனர். ஆனால் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவது அவசியம். இந்த விதியை சரியான முறையில் செயல்படுத்த வழிகள் உள்ளன.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி செப்டம்பர் 4 அன்று மகாராஷ்டிராவின் பால்காரில் கார் விபத்தில் இறந்தது, ஒருவர் வாகனத்தை ஓட்டவிட்டாலும் சீட் பெல்ட் அணிவது குறித்த புதிய விவாதத்தைத் தூண்டியது.

அக்டோபர் 14ம் தேதி (வெள்ளிக்கிழமை), மும்பை போக்குவரத்து காவல்துறை நவம்பர் 1 முதல் பின் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் உட்பட அனைத்து கார் பயணிகளுக்கும் சீட் பெல்ட் அணிவதைக் கட்டாயமாக்கியது. முன் மற்றும் பின்புறம் சீட் பெல்ட் இல்லாமல் இருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த அறிவிப்பு மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம், 2019, பிரிவு 194 (b) (1) இன் கீழ் வருகிறது. கார் தயாரிப்பாளர்கள் கார்களின் அனைத்து இருக்கைகளிலும் சீட் பெல்ட் அலாரத்தை பொருத்த வேண்டும் என்று மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.

2005ல் தான் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும், விதி விதிக்கப்பட்டதிலிருந்து தளர்வான அமலாக்கம் உள்ளது. 2012ம் ஆண்டு பிரபல மேடை கலைஞரும் நடிகருமான ஜஸ்பால் பாட்டி கார் விபத்தில் உயிரிழந்த போது, பின் இருக்கை பெல்ட் பிரச்சனை தலை தூக்கியது. ஆனால், ஓட்டுநர்களுக்கான சீட் பெல்ட் விதியைக்கூட அதிகாரிகளால் அமல்படுத்த முடியாத நிலையில், பின் இருக்கை பயணிகளுக்கு எப்படிச் செய்வார்கள்? எனவே, ஓட்டுநர்களுக்கான சீட் பெல்ட் மீது விவாதம் திரும்பியது. 2014 ஆம் ஆண்டில், மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் காரின் மீது மற்றொரு வாகனம் மோதியதால், பின் இருக்கை பெல்ட்களுக்காக மீண்டும் குரல் எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, மோட்டார் வாகனச் சட்டம் மாற்றியமைக்கப்பட்டது, 2019ல் சட்டத்தில் கடுமையான மாற்றங்கள் செய்யப்பட்டன. மிஸ்திரியின் மரணத்துடன், பின் இருக்கை பெல்ட்கள் மீது கவனம் திரும்பியுள்ளது.

சட்டத்தில் திருத்தங்கள் மற்றும் கடுமையான விதிகள் இருந்தபோதிலும், 2021ம் ஆண்டில் பின்புற சீட் பெல்ட் அணியாமல் இருந்ததற்காக 43 பேருக்கு மட்டுமே டெல்லி போக்குவரத்து காவல்துறை வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அனைத்து வாகனங்களையும் நேரடியாக கண்காணிக்க முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும், பல கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் போக்குவரத்து கேமராக்கள் பின்னால் அமர்ந்திருக்கும் குற்றவாளிகளை பிடிக்க முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். இத்தகைய பின்னணியில், இந்த விதியை மும்பை திறம்பட செயல்படுத்த முடியுமா? அல்லது வெறும் காகித அறிவிப்பாக மட்டும் இருக்குமா?

இந்தியா சாலை விபத்துக்களுக்கு பெயர் பெற்றது. அதிலும் பல விபத்துகள் சீட் பெல்ட்களை அணியாததால் ஏற்படுகிறது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 2020ம் ஆண்டில் சீட் பெல்ட் அணியாததால் 7,810 ஓட்டுநர்கள் மற்றும் 7,336 பயணிகள்என 15,146 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. விதிகளை கடைபிடிக்கிறார்களா என வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்தாலும், ஓட்டுநர் சீட் பெல்ட் அணிந்திருகிறாரா என்று மட்டுமே பார்க்கின்றனர். பின் இருக்கை பயணிககளை அவர்கள் கண்டு கொள்வதில்லை. விபத்து நடந்தால், பின் இருக்கையில் இருப்பவர்களை விட, முன் இருக்கையில் இருப்பவர்களையே அதிகம் பாதிக்கும் என்ற தவறான எண்ணமும் மக்களிடம் உள்ளது. மேலும், இருக்கைகளுக்கு கவர்கள் போடும் முயற்சியில், பின் இருக்கை பெல்ட்கள் தேவையற்றது என நினைத்து விடுகின்றனர்.

ஒருவர் சீட் பெல்ட் அணிந்தால், இறப்பு மற்றும் ஆபத்தான காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 50% குறைவு என்பது அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவின் நெடுஞ்சாலை பாதுகாப்புக்கான இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில், சீட் பெல்ட் அணியாத பின் இருக்கை பயணிகளுக்கு காயம் ஏற்படும் வாய்ப்பு 8 மடங்கு அதிகம் என்று தெரியவந்துள்ளது. மோதலின் காரணமாக ஒரு தாக்கம் ஏற்பட்டால், ஒருவர் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்படுவதை தடுத்து, காயம் ஏற்படுவதை குறைக்கிறது. ஏர்பேக் மட்டும் போதும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். நீங்கள் சீட் பெல்ட் அணியாமல் ஏர்பேக் மீது பெரும் சக்தியுடன் தாக்கினால், காயமின்றி தப்பிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இருந்தபோதிலும், சீட் பெல்ட்டின் முக்கியத்துவத்தை நாம் புறக்கணிக்கிறோம்.

எப்படி செயல்படுத்துவது?

முதலாவதாக, பின் சீட் பெல்ட் குற்றவாளிகளைப் பிடிக்கக்கூடிய பாடி கேமராக்கள் காவல்துறைக்கு அளிக்கப்பட வேண்டும்., பைக்கில் செல்லும் காவலர்கள் உட்பட அதிக நடமாடும் காவல் பிரிவுகள் தேவை. இது வாகன ஓட்டிகள் மீது தொடர்ந்து விழிப்புடன் இருக்க செய்யும்.

SaveLIFE அறக்கட்டளையின் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 1 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் பின் இருக்கை பெல்ட்டைப் பயன்படுத்துகின்றனர். கணக்கெடுக்கப்பட்ட சுமார் 37.8 சதவீதம் பேருக்கு இது தொடர்பான சட்டம் உள்ளது என்பது கூட தெரியாது, மேலும் 23.9 சதவீதம் பேருக்கு இதுபோன்ற சீட் பெல்ட்கள் இருப்பது தெரியாது. எனவே, சீட் பெல்ட்களின் அவசியம் குறித்தும், அணியாமல் இருப்பதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே எழுப்பி, பள்ளியிலேயே தொடங்க வேண்டும்.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஏற்கனவே இருக்கை பெல்ட்களுக்கான தரநிலைகளை வெளியிட்டுள்ளது, மேலும் சீட் பெல்ட்களை அணியாவிட்டால் அலாரம் எச்சரிக்கை அமைப்புகளை பொருத்துவது குறித்து கார் உற்பத்தியாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வழங்கியுள்ளது. நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறையும் வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இல்லை என்றால் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீட் பெல்ட் அணியாமல் ஒருவர் வாகனத்தை ஓட்டினால் அல்லது பயணிகள் சீட் பெல்ட் கட்டிக்கொள்ளாமல் பயணித்தால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சட்டம் கூறுகிறது. இந்த அபராதம் குறைவாக உள்ளது, இதனை குறைந்தபட்சம் ரூ.5,000 ஆக அதிகரிக்க வேண்டும்.

பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கும் சட்டத்தை செயல்படுத்துவதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். ஓட்டுநர் மற்றும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட்டைக் கட்டியிருந்தால் மட்டுமே ஓடக்கூடிய கார்களை உருவாக்க வேண்டும். சீட் பெல்ட் அலர்ட் சிஸ்டம் வாகனத்தில் உள்ள அனைவரும் சீட் பெல்ட் அணியும்வரை ஒலித்துக் கொண்டிருக்கும் வகையில் இருக்க வேண்டும்.

Tags:    

Similar News