குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: யாருக்கும் ஆதரவு இல்லை என மம்தா அறிவிப்பு

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Update: 2022-07-21 14:55 GMT

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10- ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதனையடுத்து புதியகுடியரசு துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மே.வங்க கவர்னராக இருந்த ஜெகதீப் தன்கர் களமிறங்கி உள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில், மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் தேர்வில் தங்களை யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை எனவும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News