காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் மங்களூருவில் இன்று காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
கடந்த ஜூலை மாதம் ஆஸ்கர் பெர்னாண்டசுக்கு தலையில் அடிபட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மங்களூருவில் உள்ள யெனபோயா மருத்துவமனையில் நீண்டநாள் ஐசியூவில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக ஆஸ்கர் இருந்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய நபராக திகழந்தவர் இவர்.
அவரது மறைவுக்கு கார்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமய்யா, கர்நாடாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.