சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்: முதல் 4 இடங்களை பிடித்த பெண்கள்

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில்முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். சென்ற ஆண்டு முதல் மூன்று இடங்களை பெண் தேர்வர்கள் பெற்றனர்.

Update: 2023-05-23 12:52 GMT

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்-ஏ, குரூப்-பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களையும் நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் போட்டித்தேர்வை நடத்துகிறது.

முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.. மொத்தம் 11,35,697 விண்ணப்பதாரர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர் அவர்களில் 5,73,735 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். செப்டம்பர் 16 முதல் 25 வரை நடத்தப்பட்ட எழுத்துத் (முதன்மை) தேர்வு முடிவுகள் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்பட்டத்தில் மொத்தம் 13,090 பேர் தகுதி பெற்றனர் .தேர்வின் ஆளுமைத் தேர்வில் மொத்தம் 2,529 பேர் தகுதி பெற்றுள்ளனர். நேர்காணல் மே 18 அன்று முடிவடைந்து இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். தேர்வில் முதல் மூன்று ரேங்க்களை பெண் தேர்வர்கள் பெற்றிருப்பது இது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகும்.சிவில் சர்வீசஸ் தேர்வில் 933 பேர் - 613 ஆண்கள் மற்றும் 320 பெண்கள் தகுதி பெற்று உள்ளனர். முதல் 25 இடங்களில் 14 பெண்கள் மற்றும் 11 ஆண்கள் உள்ளனர்.

அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார். கரிமா லோகியா இரண்டாம் இடமும், உமா ஹராதி மூன்றாமிடமும், ஸ்மிருதி மிஸ்ரா நான்காம் இடமும் பிடித்தனர். லோகியா மற்றும் மிஸ்ரா டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகள், ஹராதி என். ஐஐடி-ஐதராபாத்தில் பி.டெக் பட்டம் பெற்றவர்.

தேர்ச்சி பெற்றவர்களில் பொது பிரிவைச் சேர்ந்தவர்கள் 345 பேர், பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் 99 பேர், ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் 263 பேர், எஸ்சி பிரிவை சேர்ந்த 154 பேர் மற்றும் 72 பேர் எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள்.

2021 சிவில் சர்வீசஸ் தேர்வில் ஸ்ருதி சர்மா, அங்கிதா அகர்வால் மற்றும் காமினி சிங்லா ஆகியோர் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்று இருந்தனர்.

Tags:    

Similar News