இன்று தாக்கலாகிறது மத்திய பட்ஜெட் தாக்கல்: சலுகைகள் அறிவிக்கப்படுமா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதில், வருமான வரிச்சலுகை உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Update: 2022-02-01 01:45 GMT

 நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை வெளியானது.

இதன் தொடர்ச்சியாக, 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். காகிதமில்லா இந்த பட்ஜெட், இன்று பகல் 11 மணியளவில் தாக்கல் செய்யப்படுகிறது. அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் இதுவாகும்.

வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு, சலுகைகள் இருக்குமா என்று எதிர்ப்பார்ப்பு பலரிடமும் உள்ளது. அதேபோல், கொரோனா தாக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொருளாதாரச் சலுகைகளை அரசு அறிவிக்குமா என்று தொழில்துறையினர் எதிர்பார்க்கின்ற்னார்.

விரைவில் 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், வாக்காளர்களை கவர, பல்வேறு சலுகைகள் இடம் பெறக்கூடும் என்றும் தெரிகிறது.

Tags:    

Similar News