உதய்பூர் கொலைகாரனுக்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பு இல்லை: ஐ.டி. பிரிவு திட்டவட்டமாக மறுப்பு..!

உதய்பூர் கொலைகாரர்களுக்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பு இல்லை; புகைப்படங்களை வெளியிட்டு, அப்படி வெளியான தகவல் பொய்யானது என, அக்கட்சி தொழில்நுட்ப பிரிவு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Update: 2022-07-02 14:24 GMT

உதய்பூர் கொலையாளியை பா.ஜ.க.,வுடன் இணைத்து சர்ச்சை கிளப்பிய புகைப்படம்.

சில நாட்களுக்கு முன்பு, முகம்மது நபி குறித்து நுபுர் சர்மா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சை கருத்து தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக, ராஜஸ்தான் உதய்பூர் தொழிலாளி கன்னையாலால் வீடியோ வெளியிட்டார். இதனால், கடந்த ஜூன் 27 ல், கடைக்கு வந்த 2 பேர், அவரை இழுத்து சென்று, பொது இடத்தில் வைத்து, கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். அதனை வீடியோவாகவும் வெளியிட்டு மிரட்டலும் விடுத்தனர். இந்த வழக்கில் ரியாஸ் அட்டாரி மற்றும் கவுஸ் முகமது ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கொலைக்குற்றவாளிக்கும் பா.ஜ.,வுக்கும் தொடர்பு உள்ளது என படம் ஒன்றை வெளியிட்டு குற்றம் சாட்டப்பட்டது. மேலும் காங்கிரஸ் கட்சியின் பவன்கெரா கூறுகையில், கன்னையா லாலை கொன்ற ரியாஸ் அட்டாரி பா.ஜ., உறுப்பினர்களில் ஒருவர் எனவும், ராஜஸ்தான் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான குலாப்சந்த் கட்டாரியா ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் ரியாஸ் அட்டாரி பங்கேற்றது தெரியவந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும் பா.ஜ.க,வின் சிறுபான்மையினர் பிரிவின் கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாக கூறி சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார். ஆனால், பா.ஜ.,வின் சிறுபான்மையினர் பிரிவு மாநில தலைவர் சாதிக்கான் இதுதொடர்பாக அளித்த விளக்கத்தில், குற்றவாளியுடன் பா.ஜ.வுக்கு எந்த வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக குறிப்பிட்டார். பா.ஜ.,வின் ஐ.டி., பிரிவு அமித் மால்வியா கூறிய விளக்கத்தில், காங்கிரஸ் பரப்பும் பொய் செய்திகளை கண்டு தான் ஆச்சர்யப்படவில்லை எனவும், உதய்ப்பூர் கொலையாளிகள் பா.ஜ., உறுப்பினர்கள் இல்லை எனவும் கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News