திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் கடத்தல், தேடுதல் வேட்டையில் தனிப்படை

திருப்பதி பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது பெற்றோரிடமிருந்து குழந்தை கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது;

Update: 2023-10-03 04:35 GMT

குழந்தை கடத்தல் - காட்சி படம் 

திருப்பதியில் புரட்டாசி மாதம் என்பதாலும் தொடர் விடுமுறை என்பதாலும் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. சென்னையைச் சேர்ந்த சந்திரசேகர் அவருடைய மனைவி மீனா மற்றும் அவரது இரண்டு வயது மகன் முருகன். ஆகியோர் திருப்பதியில் தரிசனம் செய்வதற்காக கடந்த மூன்று நாட்கள் முன்பு திருப்பதிக்கு வந்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக அவர்கள் திருமலையில் தங்கி இரண்டு நாட்களாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்புவதற்காக நள்ளிரவு 12 மணியளவில் திருப்பதியில் உள்ள ஆர்டிசி பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அப்போது சென்னைக்கு செல்ல பேருந்து இல்லாத காரணத்தால் அங்கேயே படுத்து உறங்கினர். .

நள்ளிரவு 2 மணி அளவில் தூங்கி எழுந்து பார்த்தபோது சிறுவன் முருகனை காணாமல் பெற்றோர்கள் தேடினர். பேருந்து நிலைய வளாகம் மொத்தமாக அவர்கள் தேடியும் சிறுவனை காணாததால் திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள்.

அங்கு வந்த காவல்துறையினரும் தேர்தல் வேட்டை நடத்தினர். மேலும் குழந்தை கடத்தப்பட்டது குறித்து பேருந்து நிலைய வளாகத்தில் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள், அதேபோல சாலையில் ஓரங்களில் இருக்கக்கூடிய கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் தொடர்ந்து அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

குழந்தை கடத்தியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News