லட்சத்தீவை பாகிஸ்தானிடம் இருந்து காப்பாற்றிய இரண்டு தமிழர்கள்
லட்சத்தீவை பாகிஸ்தானிடம் இருந்து காப்பாற்றிய இரண்டு தமிழர்கள் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தது. அந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசித்த லட்சத்தீவை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது. அதை தொடர்ந்து பாகிஸ்தான் கொடியுடன் போர்க்கப்பல் ஒன்று லட்சத்தீவுக்கு விரைந்தது. அந்த தகவல் அப்போது இந்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்தவரும் பல்வேறு சமஸ்தானங்களை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பதில் முக்கிய பங்காற்றியவருமான இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு தெரிய வந்தது.
உடனடியாக விரைந்து செயல்பட்ட வல்லபாய் பட்டேல் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆற்காடு இரட்டையர்கள் என அழைக்கப்படும் அறிஞர்களான ராமசாமி முதலியார். இவர் மைசூர் சமஸ்தானத்தில் கடைசி திவானாக பணிபுரிந்தவர். அவருடைய தம்பி லட்சுமண சாமி முதலியார் இருவரையும் தொடர்பு கொண்டு பேசினார் சர்தார் வல்லபாய் படேல். ஆற்காடு இரட்டையர்களில் மூத்தவரான ராமசாமி முதலியார் நீதி கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்தவர். சிறந்த கல்வியாளரான அவருடைய தம்பி டாக்டர் லட்சுமணசாமி முதலியார் சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக 27 ஆண்டுகள் துணைவேந்தராக பணிபுரிந்தவர்.
சர்தார் வல்லபாய் பட்டேல் வழங்கிய அறிவுரையின்படி ஆற்காடு இரட்டையர்கள் திருவிதாங்கூர் சமஸ்தான போலீசாருடன் மக்களை அழைத்துக் கொண்டு லட்சத்தீவு சென்று அங்கு இந்திய தேசிய கொடியை ஏற்றி பறக்கத் செய்தனர். அதற்குள் இந்திய கடற்படையின் போர்க்கப்பலும் லட்சத்தீவுக்கு விரைந்து வந்து பாகிஸ்தான் கப்பலை அங்கு நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டது.
பட்டேலின் அறிவுரைப்படி லட்சத்தீவின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை திருவிதாங்கூர் மக்கள் மேற்கொண்டனர் இரண்டு தமிழர்கள் லட்சத்தீவை பாகிஸ்தான் படைக்கும் சிக்காமல் தடுத்து காப்பாற்றியது மிகப்பெரிய வரலாற்று பதிவாகும். மேற்கண்ட தகவலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019 அக்டோபர் 27ஆம் தேதி ஒளிபரப்பான மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருந்தார். அப்போது அவர் நாட்டின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க ஹைதராபாத் ஜூனாபத் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்த சாதனையையும் புகழ்ந்தார்.
இன்று இந்தியாவின் வளர்ச்சிக்கு இலட்சத்தீவு முக்கிய பங்களிப்பை ஆற்றி வருகிறது. மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வரும் லட்சத் தீவிற்கு இந்திய மக்கள் ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும் என பிரதமர் அழைப்பு கொடுத்திருந்தார். அதையடுத்து நரேந்திர மோடி சமீபத்தில் இந்தியாவின் யூனியன் பிரதேசமான இயற்கையில் கொஞ்சம் லட்சத்தீவிற்கு பயணம் மேற்கொண்டார். கேரளா அருகே அரபிக் கடலில் உள்ள யூனியன் பிரதேசமான லட்சத்தீவு 36 தீவுகளை கொண்டது.
அந்த அழகிய தீவுகளில் வசிக்கும் மக்கள் எளிதாக இருக்கக்கூடியவர்கள். தற்போது லட்சத்தீவு மிகச் சிறந்த சுற்றுலா பகுதியாக மாறி இருக்கிறது. உலக மக்களை அது கவர்ந்திழுக்கிறது. தினமும் லட்சக்கணக்கான இணையதளங்கள் மூலமாக லட்சத்தீவின் சிறப்புகளை அறிந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில வருடங்களில் லட்சத்தீவு உலக அளவில் சிறந்த சுற்றுலா தளமாக சிறந்து விளங்க போகிறது. லட்சத்தீவினை நினைக்கும் போதெல்லாம் அதனை காப்பாற்று இரண்டு தமிழர்களின் சமயோசிதம் நம்மை சிலிர்க்க வைக்கிறது.