காஷ்மீர் என்கவுண்டர்: 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சண்டைகளில் ஏழு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்;
ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானிலிருந்து வந்த லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இன்று அதிகாலை ஒருவர் துப்பாக்கி முனையில் பிடிபட்டதாகவும், அவரையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாகவும் ஜம்மு - காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரின் குப்வாரா பகுதியில் நேற்று முதல் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும் ஷோப்பியான் பகுதியில் உள்ளூரில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோன்று புல்வாமா பகுதியில் லஷ்கா்-ஏ-தொய்பாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
குல்காம் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்பட்டிருந்த லஷ்கா்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.