போலி இணையதளம்: பக்தர்களை எச்சரித்த திருப்பதி தேவஸ்தானம்
தேவஸ்தானம் பெயரில் போலி இணைய தளங்கள் தொடங்கி பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு போலி டிக்கெட் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
ஆண்டுக்கு ஒருமுறையேனும் திருப்பதிப் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும் என்ற பக்தர்கள் விரும்புவதால், தரிசன டிக்கெட்கள் விற்பனை தொடங்கிய உடன் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. இதைப் பயன்படுத்திக்கொண்டு சமூக விரோதிகள், தேவஸ்தானம் பெயரில் போலி இணைய தளங்கள் தொடங்கி பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு போலி டிக்கெட் விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதனால் அப்பாவி பக்தர்கள் பணத்தை இழந்து தரிசனமும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
TTD IT wing, போலி இணையதளம் குறித்து பக்தர்களை எச்சரித்து, சைபர் செல்லிடம் புகார் அளித்துள்ளது
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) IT பிரிவு போலி இணையதளத்தை அடையாளம் கண்டு திருமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. பக்தர்கள் விழிப்புடன் இருக்குமாறும், போலி இணையதளங்களுக்கு இரையாகாமல் இருக்குமாறும் திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
புகாரின் அடிப்படையில், ஆந்திர பிரதேச தடயவியல் சைபர் செல் போலி இணையதளத்தை விசாரிக்கும் நடவடிக்கையில் மூழ்கியுள்ளது. இதுவரை, 40 போலி இணையதளங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் புதியது சைபர் கிரைம் கீழ் 41 வது பட்டியலிடப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போலவே, மிகக் குறைவான மாற்றங்களுடன் இந்த போலி இணையதளம் தவறான நபர்களால் உருவாக்கப்பட்டது.
போலியான இணையதளம் https://tirupatibalaji-ap-gov.org/ என அடையாளம் காணப்பட்டுள்ளது ,
அதிகாரப்பூர்வ இணையதள URL https://tirupatibalaji.ap.gov.in/ ஆகும் .
பக்தர்கள் விழிப்புடன் இருக்குமாறும், போலி இணையதளங்களுக்கு இரையாகாமல் இருக்குமாறும் திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் URL முகவரியைக் குறித்துக்கொள்ளவும், இணையதளத்தின் சான்றுகளை சரிபார்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பக்தர்கள் பாதுகாப்பாக டிக்கெட் முன்பதிவு செய்ய, அதிகாரப்பூர்வ திருப்பதி தேவஸ்தானம் மொபைல் செயலியான TTDevasthanams ஐப் பயன்படுத்தலாம் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.