பஸ் மீது லாரி மோதி விபத்து- தூங்கிக் கொண்டிருந்த 18 பேர் பலி, 25 பேர் படுகாயம்
உத்திரபிரதேசத்தில் பழுதாகி சாலையின் ஓரம் நின்ற பஸ் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து 65 பேருடன் மாடி பஸ் ஒன்று பீகார் மாநிலம் நோக்கி சொன்றுக் கொண்டிருந்தது. அப்போது உத்தரப் பிரதேசம் பாரபங்கி மாவட்டம், கோட்வாலி ராமசேனா பகுதியில் நள்ளிரவில் போது பஸ் பழுதானது.
இதனைத் தொடர்ந்து டிரைவர் பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தியிருந்தார். பஸ்சில் பயணம் செய்த சிலர் பஸ்சின் முன்புறம் சாலையில் படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில், சாலையில் வேகமாக வந்த லாரியொன்று பேருந்தின் மீது மோதியது.
தொடர்ந்து சாலையில் படுத்திருந்தவர்கள் மீது பஸ் ஏறி ,இறங்கியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.
படுகாயம் அடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவியும் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி உ.பி முதலமைச்சர் யோகிஆதித்யநாத்தை தொடர்பு கொண்டு பேசி கேட்டறிந்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி உட்பட பலரும் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.