ட்ரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டி: மழை மட்டும் விளையாடுகிறது
ட்ரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டி ஐந்தாம் நாள் ஆட்டம் மழை காரணமாக தொடங்கவில்லை. டிராவை நோக்கி செல்லும் ஆட்டம்;
இந்தியா இங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ட்ரென்ட் ப்ரிட்ஜில் நடைபெற்று வருகிறது. கடைசி நாளான இன்று இந்தியா வெற்றி பெற 157 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மழை காரணமாக போட்டி தொடங்கப்படவில்லை.
மதிய உணவு இடைவேளை முடிந்த பிறகும் மழை தொடர்வதால், போட்டி கைவிடப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இன்று இரு அணிகளும் விளையாடாமல், மழை மட்டுமே விளையாடி வருகிறது.