ப்ரீ-பெய்டு வாடிக்கையாளரா நீங்க? இதோ உங்களுக்கான நல்ல செய்தி!

மொபைல் போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான வேலிடிட்டி எனப்படும் திட்டம் செல்லுபடியாகும் காலம், தற்போதுள்ள 28 நாட்களுக்கு பதிலாக, 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டுமென்று, டிராய் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-01-28 06:00 GMT

நாட்டில் உள்ள பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத வவுச்சருக்கு வேலிடிட்டி எனப்படும் திட்டம் செல்லுபடியாகும் காலத்தை, தற்போது 28 நாட்கள் என்று நிர்ணயித்துள்ளன. இதன் காரணமாக , பிரீ பெய்டு வாடிக்கையாளர்கள், ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 30 நாள் திட்டம் ஒன்றை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( டிராய்) உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, பிரீ பெய்டு ஒருமாத வவுச்சர் திட்டத்தில், செல்லுபடியாகும் காலமான வேலிடிட்டி இனி, தற்போதுள்ள 28, நாட்கள் என்பதை,   30 நாட்களாக செல்போன் நிறுவனங்கள் நிர்ணயித்தாக வேண்டும். இது, பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

Tags:    

Similar News