45 நாட்களில் ரூ.4 கோடி சம்பாதித்த ஆந்திர விவசாயி
ஆந்திராவைச் சேர்ந்த தக்காளி விவசாயி 45 நாட்களில் ரூ.4 கோடி சம்பாதித்து கோடீஸ்வரனாகியுள்ளார்;
தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் விவசாயி தம்பதியினர் 40,000 பெட்டி தக்காளியை விற்று 45 நாட்களில் 3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளனர்.
நாட்டில் தக்காளி விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக தக்காளி விலை அதிகரித்தாலும் சில நாட்களில் குறைந்துவிடும். ஆனால் இம்முறை அதிகரித்த தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. தக்காளி விவசாயம் செய்த விவசாயிகள் சிலர், ஒரு சில மாதங்களில் லட்சாதிபதியாகவோ அல்லது கோடீஸ்வரர்களாகவோ மாறி இருக்கின்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி 22 ஏக்கர் விவசாய நிலத்தில், ஏப்ரல் முதல் வாரத்தில் அரிய வகை தக்காளி செடியை விதைத்தார். மகசூலை விரைவாகப் பெற, தழைக்கூளம் மற்றும் நுண்ணீர் பாசனம் போன்ற மேம்பட்ட நுட்பங்களை அவர் செயல்படுத்தினார். ஜூன் மாத இறுதியில் தக்காளி மகசூல் கிடைத்ததால் அவர் தனது முயற்சியில் வெற்றி பெற்றார்.
அவர் தனது விளைபொருட்களை தனது சொந்த இடத்திற்கு அருகில் உள்ள கர்நாடகாவில் உள்ள கோலார் சந்தையில் விற்றார். கடந்த 45 நாட்களில் 40,000 பெட்டிகள் விற்பனையான போது சந்தையில், 15 கிலோ கொண்ட தக்காளியின் விலை ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை இருந்தது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி சந்திரமௌலி. கூட்டுக்குடும்பமாக வசிக்கும் இவருக்கு கர்காமண்டலா கிராமத்தில் 22 ஏக்கர் நிலம் உள்ளது. தக்காளி விவசாயத்தில் அதிக லாபம் அடைந்தது குறித்து விவசாயி கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக தக்காளி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன். கடந்தாண்டு ஜூலை மாதத்தில் தக்காளி விலை வீழ்ச்சியால் எனக்கு ரூ.1.5 கோடி கடன் ஏற்பட்டது. அடிக்கடி மின்தடையால் விளைச்சலும் சரியாக இல்லை.
ஆனால் இந்தாண்டு எனக்கு அதிர்ஷ்ட காற்று வீசியது. எனது நிலத்தில் விளைச்சலும் அமோகமாக இருந்தது. இதுவரை 35 முறை அறுவடை செய்துவிட்டேன். எனது வயலில் இன்னும் 15 முதல் 20 முறை தக்காளி அறுவடை செய்யலாம். தக்காளிக்கு கோலார் வேளாண் சந்தையில் நல்ல விலை கிடைப்பதால், 130 கி.மீ. தூரம் பயணம் செய்து தக்காளியை விற்பனை செய்கிறேன். கடந்த 45 நாளில் ரூ.4 கோடிக்கு தக்காளியை விற்பனை செய்தேன். இதுவரை கிடைத்த விளைச்சலில் ரூ.4 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக எனது 22 ஏக்கர் நிலத்தில் ரூ.1 கோடி முதலீடு செய்து விளைச்சலை பெற வேண்டியிருந்தது. கமிஷன் மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் அடங்கும். அதனால், லாபம் ரூ. 3 கோடியாக இருக்கும்.
இந்த பணம் மூலம் மேலும் நிலத்தை வாங்கி தோட்டக்கலையை நவீன தொழில்நுட்பத்துடன் மிக பெரிய அளவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். சில நேரங்களில் விவசாயத்தில் விளைச்சல் தோல்வியடைந்து கடன் ஏற்படலாம். ஆனால் விவசாயத்தின் மீது நம்பிக்கை வைத்து, அந்த தொழிலை மதிப்பவர்கள் ஒரு போதும் தோல்வியடையமாட்டார்கள். இவ்வாறு முரளி கூறினார்.
இதற்கிடையில், இந்தியாவின் மிகப்பெரிய தக்காளி சந்தைகளில் ஒன்றான ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மதனப்பள்ளியில் தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது, ஏனெனில் முதல் தர தக்காளியின் விலை வெள்ளிக்கிழமை (ஜூலை 28) அதிர்ச்சியூட்டும் வகையில் ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. .
வெள்ளிக்கிழமை தக்காளியை வாங்க ஏராளமான வியாபாரிகள் சந்தைக்கு குவிந்தனர். முதல் தர தக்காளி வடமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன், 25 கிலோ கொண்ட ஒரு கிரேட், கிலோ, 120 ரூபாய்க்கு, 3,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால், தற்போது மற்ற மாநிலங்களில் தக்காளியின் தேவை அதிகரித்துள்ளதால், கிலோவுக்கு ரூ.200 வரை விலை உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் இறுதி வரை தக்காளியின் விலை ஏற்றம் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.