ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு
ரஜோரியில் உள்ள ஒரு கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய சந்தேகத்திற்கிடமான இலக்கு தாக்குதலில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர்.;
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீவிரவாதிகள் நடத்திய சந்தேகத்திற்கிடமான இலக்கு தாக்குதலில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர். ரஜோரி மாவட்டத்தின் டாங்ரி கிராமத்தில் உள்ள மூன்று குடியிருப்பு வீடுகள் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் இரவு 7 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானதாக அவர் கூறினார். காயமடைந்தவர்கள் ரஜோரியில் உள்ள GMC அசோசியேட்டட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர், அங்கு காயமடைந்தவர்களில் மூன்று பேர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும், ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதல் நடந்த உடனேயே, போலீசார், சிஆர்பிஎஃப் மற்றும் ராணுவ வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் பல்வேறு அமைப்புகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த பந்த் அழைப்பிற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.
ரஜோரி மருத்துவமனைக்கு வெளியே திரண்டிருந்த மக்கள், அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர். லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, யூனியன் பிரதேச நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன