நாட்டின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு விரைவில் திருமணம்
நாட்டின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும், பாலுச்சேரி எம்எல்ஏ கேஎம் சச்சின் தேவுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளது
நாட்டின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும், பாலுச்சேரி எம்எல்ஏ கேஎம் சச்சின் தேவுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை பிப்ரவரி 16 புதன்கிழமை சச்சினின் தந்தை கே.எம்.நந்தகுமார் வெளியிட்டார். மேலும், திருமணத்தை இரு குடும்பத்தினர் சந்தித்து ஆலோசித்ததாகவும் அவர் கூறினார்.
திருவனந்தபுரம் மேயராக இருக்கும் ஆர்யா ராஜேந்திரன், 2020ல் தனது 21வது வயதில் மேயரானார். 28 வயதான தேவ், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாலுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும் திரைப்பட நடிகருமான தர்மஜன் போல்காட்டியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.