பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநர் பொறுப்பேற்பு

பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநராக திரு மணீஷ் தேசாய் பொறுப்பேற்றார்.;

Update: 2023-09-02 02:13 GMT

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (பிஐபி) முதன்மை தலைமை இயக்குநராக பொறுப்பேற்ற மணீஷ் தேசாய்.

புதுடெல்லியில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (பிஐபி) முதன்மை தலைமை இயக்குநராக மணீஷ் தேசாய் நேற்று பொறுப்பேற்றார். ஏற்கனவே இப்பொறுப்பில் இருந்த திரு ராஜேஷ் மல்ஹோத்ரா நேற்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து  மணீஷ் தேசாய் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

மணீஷ் தேசாய், 1989 –ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய தகவல் பணி அதிகாரி ஆவார். இதற்கு முன்பு,  மணீஷ் தேசாய், மத்திய தகவல் தொடர்பு அலுவலகத்தின் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார். அரசு விளம்பரங்கள் மற்றும் மக்கள் தொடர்பு நடவடிக்கைகளை அவர் கவனித்து வந்தார்.

இத்துறையில் 30 ஆண்டு காலம் சிறந்த அனுபவம் பெற்ற  மணீஷ் தேசாய், திரைப்படப் பிரிவு தலைமை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ) உட்பட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகளின் ஊடக நடவடிக்கைகளைக் கையாளும் பணியிலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் அவர் பணிபுரிந்துள்ளார்.

Tags:    

Similar News