2023-24-ம் ஆண்டில் தலைநகர் முழுவதும் 3.88 கோடி மரங்கள் நட இலக்குகள் இறுதி
2023-24-ம் ஆண்டில் தலைநகர் முழுவதும் 3.88 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய தலைநகர் மண்டலத்தின் ஒட்டுமொத்த பசுமைப் பரப்பை அதிகரிக்கச் செயல்படும் வகையிலும், 2023-24- ம் ஆண்டிற்கான மரம் நடும் திட்டத்தையும் இறுதி செய்யவும் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் தொடர்ச்சியாக பல ஆலோசனைகளையும், ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தியது. பல்வேறு தரப்பிலிருந்து பெறப்பட்ட உள்ளீடுகளைக் கொண்டு இதற்கான இலக்குகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் என தேசிய தலைநகர் மண்டலத்தின் கீழ் வரும் பகுதிகளில், மொத்தம் 3 கோடியே 58 லட்சத்து 90 ஆயிரத்து 997 மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களுடன் தனித்தனியான கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனியே இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக மரம் நடுதலுக்கு முக்கியத்துவம் அளித்து, என்சிஆர் முழுவதும் மியாவாக்கி போன்ற நுட்பங்களின் மூலம் காடு வளர்ப்பு முயற்சிகளுக்கு காற்று தர மேலாண்மை ஆணையம் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
தலைநகர் பகுதியில் காற்று மாசுபாட்டிற்கு நீண்டகால தீர்வு காண பசுமையாக்குதலை ஊக்குவிப்பது ஆணையத்தின் விரிவான கொள்கையில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
சாலையோரங்கள் பசுமையாக்கல்.
நிறுவனங்கள்/தொழிற்சாலைகளின் எல்லைகளில் மியாவாக்கி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அடர்த்தியான தோட்டங்கள் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல்
அனைத்து வகை வனப்பகுதிகளின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துதல் உள்ளிட்டவற்றை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நிலை | 2023-24க்கான இலக்கு |
டெல்லி | 95, 04,390 |
ஹரியானா (NCR மாவட்டங்கள்) | 88,36,657 |
ராஜஸ்தான் (NCR மாவட்டங்கள்) | 23,14,892 |
உத்தரப் பிரதேசம் (NCR மாவட்டங்கள்) | 1,52,35,058 |
மொத்தம் | 3,58,90,997 |