கேரளத்திற்கு இன்று (ஜூலை 30) மத்திய உயர்நிலைக் குழு செல்கிறது
கேரளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய உயர்நிலைக் குழு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இன்று கேரளா செல்கிறது.
கேரளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய உயர்நிலைக் குழு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இன்று கேரளா செல்கிறது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ள சூழலில், கேரள மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நாட்டில் பதிவாகும் மொத்த பாதிப்பில் 50 சதவீதம் கேரளத்திலிருந்து பதிவாகிறது. இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"கேரளத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட மத்திய சுகாதாரத்துறையின் உயர்நிலைக் குழு கேரளத்திற்கு அனுப்படவுள்ளது. தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் எஸ்.கே.சிங் தலைமையில் 6 பேர் கொண்ட மத்தியக் குழு இன்று (ஜூலை 30) ஆம் தேதி கேரளத்திற்கு செல்லவுள்ளது. மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து மாநில களநிலவரத்தை ஆய்வு செய்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்தியக் குழு மேற்கொள்ளவுள்ளனர்.