திருமணத்திற்காக வெள்ளத்தை எதிர்த்துச் சென்ற மணமக்கள்: வைரலாகும் வீடியோ
ஆலப்புழாவில் திருமணத்திற்காக வெள்ளத்தை எதிர்த்துச் சென்ற மணமக்களின் வீடியா தற்போது வைரலாகி வருகிறது.;
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மணமகனும், மணமகளும் திருமணத்திற்காகச் சமையல் பாத்திரத்தில் தலைவாடி பனையன்னூர்காவு தேவி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அம்பலப்புழாவில் வசிக்கும் மணப்பெண் ஐஸ்வர்யாவும், தக்காழியைச் சேர்ந்த மணமகன் ஆகாஷ் இருவரும் செங்கனூரில் சுகாதாரப் பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
கேரளா முழுவதும் இடைவிடாத மழையின் மத்தியில், இளம் தம்பதியினர் வெள்ளத்தை எதிர்த்து பாரம்பரிய செப்பு சமையல் பாத்திரத்தில் கிட்டத்தட்ட 500 மீட்டர்கள் தைரியமாக பயணம் செய்து, இன்று (திங்கட்கிழமை) காலை ஆலப்புழா அருகே உள்ள கோவிலில் திருமணம் செய்துகொள்ள சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர்.
இந்த சுவாரஸ்யமும் பரபரப்பும் நிறைந்த திருமண வைபோக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.