மாநில காவல்துறைகளின் தொழில்நுட்ப மேம்பாடு: மத்திய அரசு தொடர்ந்து நிதியுதவி

மாநில காவல்துறைகளின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு மத்திய அரசு தொடர்ந்து நிதியுதவி: மாநிலங்களவையில் தகவல்

Update: 2022-03-17 03:34 GMT

உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் 

மாநிலங்களவையில், கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு ஆகியவை மாநிலங்கள் சம்பந்தப்பட்டது என்றாலும், காவல்துறை நவீனமாக்கலுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மாநிலங்களின் காவல்துறை நவீனமாக்கலுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

காவல் துறை நவீனமாக்கலுக்காக தமிழகத்துக்கு கடந்த 2016-17ம் நிதியாண்டில் ரூ.89.24 கோடியும், 2017-18ம் நிதியாண்டில் ரூ.15.54 கோடியும், 2018-19ம் நிதியாண்டில் ரூ.37.27 கோடியும், 2019-20ம் நிதியாண்டில் ரூ.28.49 கோடியும் மத்திய அரசு வழங்கியது. இதேபோல் அனைத்து மாநிலங்களுக்கும் காவல்துறை நவீனமாக்கலுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாநிலங்களின் காவல்துறை நவீனயமாக்கத்தில் தொழில்நுட்ப முன்னேற்றம் குறிப்பிடத்தக்க அளவில் நடந்துள்ளது. மாநில காவல்துறைகளின் தகவல் தொடர்புகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறியுள்ளன. கண்காணிப்பு பணியில் சிசிடிவி கேமிராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. உடலில் அணியும் கேமிராக்கள், ட்ரோன்கள் ஆகியவற்றையும் மாநில காவல்துறை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. தானியங்கி விரல்ரேகை பதிவு அடையாள கருவி, 3டி கிரைம் சீன் ஸ்கேனர் உட்பட பல நவீன தொழில்நுட்பங்கள் மாநில காவல் துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன, என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News