பனிபொழிவால் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய மாற்று நெடுஞ்சாலை மூடப்பட்டது

Update: 2021-04-03 05:45 GMT

பீர் பஞ்சால் மலைத்தொடரில் பனிப்பொழிவு ஏற்பட்டதையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் முகலாய சாலையில் பனிஅகற்றும் பணியை மேற்கொண்டனர்.தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தை ரஜௌரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களுடன் இணைக்கும் முகலாய சாலையில் பனியை அகற்ற ஜேசிபி உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றாக பார்க்கக்கூடிய முகலாய சாலை, கடந்த ஆண்டு டிசம்பர் முதல் பனிகாரணமாக மூடப்பட்டுள்ளது, மேலும் இந்த மாத இறுதியில் மீண்டும் திறக்கவாய்ப்புள்ளது.

Tags:    

Similar News