வருடாந்திர திருவிழாவிற்காக திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

வருடாந்திர திருவிழாவிற்காக திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

Update: 2024-08-09 14:45 GMT

2024 வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் கூடுதல் நெரிசலைக் கருத்தில் கொண்டு, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, வாஸ்கோ-ட-காமா – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி வழியாக வாஸ்கோடகாமா – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள்

ரயில் எண்.07361 வாஸ்கோ-ட-காமா – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் 2024 ஆகஸ்ட் 27, மற்றும் 02 & 06 செப்டம்பர் (3 சேவைகள்) வாஸ்கோ-ட-காமாவில் இருந்து 21.55 மணிக்குப் புறப்பட்டு மூன்றாம் நாள் மதியம் 01.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

வாஸ்கோ-ட-காமா சிறப்பு ரயில் 2024 ஆகஸ்ட் 29, 04 மற்றும் 08 செப்டம்பர் (3 சேவைகள்) ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து 23.55 மணிக்குப் புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 00.15 மணிக்கு வாஸ்கோ-ட-காமா சென்றடையும்.

இந்த ரயிலில் ஏசி 2-அடுக்கு – 2, ஏசி மூன்றடுக்கு 4, ஸ்லீப்பர் வகுப்பு 10, பொது இரண்டாம் வகுப்பு 2 & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் – 2 கோச்சுகள்  பொருத்தப்பட்டு இருக்கும்.

மட்கான், சன்வோர்டெம், குலேம், கேஸில் ராக், லோண்டா, தார்வாட், ஹூப்பள்ளி, ஹாவேரி, ஹரிஹர், தாவங்கேரே, சிக்ஜாஜூர், பிரூர், அரசிகெரே, தும்கூர், SMVT பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், ஒயிட்ஃபீல்ட், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ரயில் நிலையங்கள்.

சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களின் நேரங்கள்:

ரயில் எண்.07361 வாஸ்கோ-ட-காமா வேளாங்கண்ணி சிறப்பு ரயில்:

(28 ஆகஸ்ட், 03 & 07 செப்டம்பர், 2024 அன்று) சேலம் 17.20/17.30 மணி; நாமக்கல் – 18.19/18.20 மணி; கரூர் – 18.58/ 19.00 மணி.

ரயில் எண்.07362 வேளாங்கண்ணி – வாஸ்கோ-ட-காமா சிறப்பு ரயில்:

(30 ஆகஸ்ட், 05 & 09 செப்டம்பர், 2024) கரூர் 04.23 / 04.25 மணி; நாமக்கல்05.09 / 05.10 மணி; சேலம் 06.05/06.15 மணி.

இத் தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News