திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
திருச்சானூரில் குடிகொண்டிருக்கும் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதம் தினமான இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன
லக்ஷ்மி தேவியின் மறு அவதாரம் என்று கருதப்படும் திருச்சானூரில் குடிகொண்டிருக்கும் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதம் தினமான இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
கோவிலில் உள்ள முகமண்டபத்தில் உற்சவ தாயார் எழுந்தருள செய்த அர்ச்சகர்கள் தாயாருக்கு அபிஷேகம், ஆராதனை, நைவேத்திய சமர்ப்பணம்,லட்ச குங்கும அர்ச்சனை ஆகியவை உள்ளிட்ட சிறப்புகளை செய்து முடித்தனர். அப்போது வரலட்சுமி விரத சிறப்பு பூஜை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த பக்தர்களுக்கு வழங்குவதற்கான ரவிக்கை துண்டுகள், மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் தாயார் திருவடியில் வைக்கப்பட்டு ஆசி பெறப்பட்டன. தொடர்ந்து அவற்றை தபால் மூலம் டிக்கெட்டுகளை வாங்கிய பக்தர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றன.