எதிர்கட்சிகள் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

Parliamentary Government - எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்றஇரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது

Update: 2022-07-20 06:09 GMT

Parliamentary Government - பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்

ஜிஎஸ்டி உயர்வு, பணவீக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்டவைகளை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியதால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. சலசலப்புக்கு மத்தியில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "இது சரியல்ல. பெரும்பான்மை எம்.பி.க்கள் கேள்வி நேரம் இயங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாடாளுமன்றம் இயங்க வேண்டுமா? காங்கிரசும் மற்றவர்களும் தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

பணவீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா நடவடிக்கைகள் மூன்றாவது நாளாக தடைபட்டன. மல்லிகார்ஜுன கார்கே குழப்பத்தின் மத்தியில் பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில், அவைத் தலைவர் வெங்கையா நாயுடு மேல்சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News