குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் சோனியா காந்தி சந்திப்பு

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.;

facebooktwitter-grey
Update: 2022-08-23 08:13 GMT
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் சோனியா காந்தி சந்திப்பு
  • whatsapp icon

நாட்டின் 15வது குடியரசு தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த திரௌபதி முர்மு கடந்த மாதம் பதவியேற்றுக்கொண்டார். இதனையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர சோனியா காந்தி நேரில் வர முடியாததால் சமூக வலைதள பக்கத்தில் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி தெரிவிக்கையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறியுள்ளது

Tags:    

Similar News