சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
Sonia Gandhi, admitt hospital- காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Sonia Gandhi, admitt hospital- காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ( வயது 77) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திராகாந்தியின் மருமகள், ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் தாயார். தனது கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பின், அரசியலில் ஆர்வம் இல்லாத சோனியா காந்தி. சிலரின் வற்புறுத்தலின் பெயரில் 1997ம் ஆண்டு அரசியலில் நுழைத்தார். பின் இவரை அனைவரும் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்தனர். வெளிநாட்டவராக இருந்து இந்தியா மண்ணில் நீண்ட கால ஆட்சியில் இருந்து வரலாறு படைத்தார் இவர் . பின் சில ஆண்டுகளில் சிறந்த பெண் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி.
1991ம் ஆண்டு, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சி அந்த நேரம் சோர்வாக இருந்தது . காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரின் ஆசைக்காக 1997ம் ஆண்டு காங்கிரஸின் அடிப்படை உறுப்பினாராக மட்டும் சோனியா இருந்தார். அடுத்த ஆண்டிலேயே அதாவது 1998ம் ஆண்டில், தலைவர் பொறுப்பேற்றார்.அடுத்தது 1999ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அவரது கணவர் போட்டியிட்ட இடமான உத்திரப் பிரதேசத்தில் உள்ள அமேதி இடத்தில் போட்டியிட்டார்.
பாஜக வேட்பாளர் சுஷ்மா சுவராஜை தோற்கடித்து, 13 வது லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பை ஏற்றார் சோனியா. பிஜேபி கட்சிக்கு எதிராக பல தீர்மானங்களை போட்டார் இவர். காங்கிரஸ் தலைவராக பத்து வருடங்களுக்குத் தொடர்ந்து பதவியில் இருந்தார்.
2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் பல கட்சிகள் தோல்வி அடைந்தது. இதனால் சோனியா காந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று பலரும் நினைத்தனர். ஆனால் சோனியா வெளிநாட்டு பெண் என்றும் இந்திய குடி உரிமைச் சட்டம் பற்றியும் பல காரணங்கள் சொல்லி மக்கள் இடையே மதிப்பை எதிர் கட்சிகள் குறைத்தது.
பின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராகப் பொறுப்பேற்ற அவர். திறமை வாய்ந்த பொருளாதார நிபுணர் யார் என்று அறிந்து டாக்டர். மன்மோகன் சிங்கை பிரதமர் பதவிக்காகப் பரிந்துரைத்தார். சில நாட்களிலே அனைத்து பதவிப்பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்தார் சோனியா காந்தி அவர் பதவிக்கு என்றும் ஆசைப்படவில்லை.
இருப்பினும் 2006 ஆம் ஆண்டு மே நிகழ்ந்த ராய்பரேலி பாராளுமன்றத் தொகுதித் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற அவர் மீண்டும் அப்பதவிப் பொறுப்பேற்றார். தேசிய ஆலோசனைக் குழுவின் கூட்டத்தலைவராகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராகவும் இருந்து வந்தார்.
2009 பொதுத்தேர்தல்களில் அவரது தலைமையில் நடத்த தேர்தலில், மாபெரும் வெற்றிப் பெற்றது. தற்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலை, எதிர்நோக்கி கட்சி பணிகளில் இருந்து வருகிறார் சோனியா.
இந்நிலையில், லேசான காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.