இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளுக்கான தேர்வு: டிஜிட்டல் மயமாகியது
அதிகாரிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்வதற்கான இணையதளத்தை தொடங்கியது இந்திய கடலோர காவல் படை.;
இந்திய கடலோர காவல் படையில் அதிகாரிகளுக்கான தேர்வு தற்போது டிஜிட்டல் மயமாகியுள்ளது. அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக (https://joinindiancoastguard.cdac.in) என்ற இணையதளத்தை கடலோர காவல் படை தொடங்கியுள்ளது.
இந்த இணையதளத்தை புதுதில்லியில், இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குனர் திரு. கிருஷ்ணசாமி நடராஜன் தொடங்கி வைத்தார். இந்த இணையதளத்தை புனேவை சேர்ந்த சி-டிஏசி நிறுவனம் வடிவமைத்துள்ளது. கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வுகள் மூலம் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவர். இதன் மூலம் கடலோர காவல் படை அதிகாரிகள் தேர்வில் மனித தலையீடு குறைந்து வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும். மத்திய அரசின் தொலைநோக்கான, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கடலோர காவல் படையில் அதிகாரிகள் தேர்வு டிஜிட்டல் மயமாகியுள்ளது.